சேவ் நந்தினி , வைரலாகும் ஹாஷ்டாக் , பீதியில் பாஜக , கர்நாடக தேர்தலில் திடீர் திருப்பம் .

2 Min Read
Picture credit : PTI

கர்நாடகாவில் மிக விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது . இந்தச்சூழ்நிலையில் சேவ் நந்தினி எனும் ஹாஷ்டாக் மிகவும் வைரலாகி உள்ளது . மேலும் இந்த ஹாஷ்டாக் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தியே தலைகீழாக மாற்றியுள்ளது .மிக விரைவில் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் ஆளும்  பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே தான் கடும் போட்டி இருக்கிறது. அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது.

- Advertisement -
Ad imageAd image


சூழ்நிலை இப்படியாகயிருக்க ‘நந்தினியைக் காப்போம் (#SaveNandini)’ – இதுதான் கர்நாடகாவின் மிகப் பெரிய பிரச்சாரமாக தற்போது உருவெடுத்திருக்கிறது. கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப் பதிவுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கர்நாடகாவின் விவசாயிகள், வியாபாரிகள், மாணவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என எல்லோரும் தங்கள் சமூக ஊடக பக்கங்களில் #SaveNandini ஹேஷ்டாக்கை வைரலாக்கி வருகிறார்கள்.

போராட்டம் நடத்தும் கேஆர்வி கட்சி தொண்டர்கள் 


யார் இந்த நந்தினி : தமிழ்நாட்டில் ஆவின் இருப்பதுபோல், கர்நாடக பால் கூட்டுறவு அமைப்பு ‘நந்தினி’ என்ற  பெயரில்தான் பால் மற்றும் பால் பொருட்களை அந்த மாநிலம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.  இதனிடையே குஜராத் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நடத்தும் அமுல் நிறுவனம் போட்ட ஒற்றை ட்வீட் கர்நாடகாவில் ஆளும் பாஜகவுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்களைக் கிளப்பியுள்ளது. அதாவது குஜராத்தைச் சேர்ந்த அமுல் நிறுவனம் பெங்களூருவில் ஆன்லைன் விநியோகங்களைத் தொடங்குவதாகப் பதிவிட்டிருந்தது. இது அம்மாநிலத்தில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .


காங்கிரஸ் மற்றும் ஜேடிஎஸ் தலைவர்கள் இதைக் கையில் எடுத்து பாஜகவைக் கடுமையாகச் சாடி வருகின்றனர். கர்நாடக நிறுவனமான நந்தினியை  அழிக்கும் தீய முயற்சி இது என்றும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர் . எதிர்க்கட்சிகள் மட்டும் இல்லாமல் கர்நாடக பால் உற்பத்தியாளர்கள், பால் கூட்டுறவுச் சங்கங்கள், விவசாயிகள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் நந்தினிக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வருகிறார்கள்.


இவர்களில் பலரும் நந்தினி பாலகங்களுக்குச் சென்று நந்தினி பால் பொருட்களை வாங்கி செல்பி எடுத்து சமூக ஊடகங்களில் பகிர்வது, நந்தினி பால் குடித்து அதன் புகைப்படங்களைப் பகிர்வது என நந்தினிக்கான தங்கள் ஆதரவை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
அடுத்த மாதம் தேர்தல் நெருங்கும் நிலையில் , நந்தினி விவகாரம் , கர்நாடக பாஜக வில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .

Share This Article
Leave a review