விஜயகாந்த் முகத்தை பார்த்து கதறி அழுத சத்யராஜ்!

2 Min Read
சத்தியராஜ்

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடலைப்பார்த்து நடிகர் சத்யராஜ் கதறி அழுதது காண்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவைத்துவிட்டது. தேமுதிக தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவருடைய உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அஞ்லிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடையை உடல் தேமுதிக தலைமை அலுவலகத்திலேயே நாளை மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் என சாரை சாரையாக கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் குவிந்து வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image
விஜயகாந்த்

ஏழை எளிய தொழிலாளர்களின் பசிப்பிணி போக்கிய மாமனிதரின் முகத்தை ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று,கட்சி அலுவலகத்தின் வாசலில் கோடான கோடி மக்கள் கதறி அழுதபடி நின்று கேப்டன், கேப்டன் எழுந்துவா என கதறி அழுதார்கள். கட்டுக்கடங்காத கூட்டம் வந்து கொண்டே இருப்பதால், கோயம் பேட்டி,போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. கேப்டன் விஜயகாந்த்: கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாததால், மறைந்த விஜயகாந்தின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக தீவுத்திடலில் வைக்கப்பட உள்ளது. நாளை காலை 6 மணியளவில் விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் இருந்து தீவுத்திடலுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இறுதி ஊர்வலம்

பொதுமக்கள் அஞ்சலிக்கு பின் விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் பூந்தமல்லி சாலை வழியாக தேமுதிக தலைமை அலுவலகத்தை அடைந்து, மாலை 4:45 மணியளவில் கட்சி தலைமை அலுவலகத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய இசைஞானி இளையராஜா,மற்றும் பல திரை பிரபலங்கள்

கதறி அழுத சத்யராஜ்

நடிகர் விஜயகாந்தின் உடலுக்கு தொண்டர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் அஞ்சலி செலுத்த வந்த சத்யராஜ், விஜயகாந்தின் உடலைப் பார்த்து, அய்யோ.. உன்ன நான் இப்படியா பாக்கணும் என்று கதறி அழுதார். அருகில் இருந்த பிரேமலதா, அண்ணே என்று கதறி அழுதது பார்ப்பவர்களை கண்கலங்க வைத்தது. எந்த நடிகராக இருந்தாலும், அவர்களின் குறைய கேட்டு உதவி செய்த கேப்டன் விஜயகாந்த் அவர்களது மறைவு, தமிழகத்துக்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது இன்னுயிர் நம்மை விட்டுப் பிரிந்தாலும், அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்.

மருத்துவ அறிக்கை

நிமோனியாவுக்காக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு வென்டிலேட்டரில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவர்களின் தீவிர முயற்சியும் பலனளிக்காததால்,அவர் இன்று உயிரிழந்தார் என மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மருத்துவப் பரிசோதனையில் கேப்டன் அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதால் வென்டிலேட்டர் சிகிச்சை கொடுக்கப்படுகிறது என்று தேமுதிக வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது

 

Share This Article
Leave a review