தமிழ்நாட்டில் சாதாரண நாட்களை விட பண்டிகை காலங்கள் மற்றும் முகூர்த்த நாட்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து காணப்படும். ஆனால் நாளை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றே பூக்கள் விலை கிடுகிடு விலை உயர்வை சந்தித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையும், நாளை மறுநாள் விஜயதசமியும் கொண்டாடப்படுகிறது. சரியாக திங்கள், செவ்வாய் விடுமுறை வந்து விட்டதால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்பதால் மக்கள் பலரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுள்ளனர்.

தற்போது முகூர்த்த நாள் மற்றும் ஆயுதபூஜையும் சேர்ந்து வருவதால் பூக்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளதால் விலையும் அதிகரித்துள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் தஞ்சை பூச்சந்தையில் பூக்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
வழக்கமாக கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட செவ்வந்தி பூ கிலோ 250 ரூபாயும், சம்பங்கி கிலோ 250 ரூபாயும் விற்கப்பட்டு வருகிறது. கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ முல்லைப்பூ 800 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது. 100 ரூபாய்க்கு விற்கப்பட்டு வந்த அரளிப்பூ 500 ரூபாய் வரை விற்பனை ஆகிறது.
பத்து ரூபாய்க்கு விற்கப்பட்ட சென்டி பூ கிலோ இந்த 80 ரூபாயும் 500 ரூபாய்க்கு விற்கப்பட்ட சந்தன முல்லை இன்று ஆயிரம் முதல் 1200 ரூபாய் வரை விற்பனை ஆகிறது. இதனால் சில்லறை வியாபாரிகளும் பொதுமக்களும் குறைவான அளவில் பூக்கள் வாங்கி செல்கின்றனர். விழா காலங்களில் பூக்களின் விலை கடுமையாக உயர்வதால் சில்லறை வியாபாரிகளும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதே நேரத்தில் விழாக்களில் பூக்கள் முக்கிய பங்கு வகிப்பதால் குறைவான அளவில் பூக்களை பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர். பூக்களின் விலையை கண்ட பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பூக்கள் விலை அதிகரித்துள்ள அதேசமயம் விற்பனையும் படுஜோராக நடப்பதால் பூ வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நவராத்திரி திருவிழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.