மாவட்ட ஆட்சியர் வருகைக்காக எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கைகளால் கழிவு நீர் கால்வாய் சுத்தம் செய்த தூய்மை பணியாளர்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் தேசிய நெடுஞ்சாலையின் உயர்மட்ட பாலத்தின் பக்கவாட்டு சுவர் இடிந்து விபத்துகுள்ளானது. இந்நிலையில் விபத்தில் நடந்த பகுதியை தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் வருகை தர உள்ளார் என அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அப்பகுதி சுத்தம் செய்யும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். அப்போது தூய்மை பணியாளர் ஒருவர் எந்த பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கழிவு நீர் கால்வாயை கைகளால் சுத்தம் செய்யும் காட்சிகள் தற்போது வைரலாக பரவி வருகிறது.