திருவாரூர் அருகே கிராமத்தில் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய குழி தோண்டிய போது பெருமாள் சிலை, ஆண்டாள் சிலை, கருடன் சிலை, தெய்வ சிலை, உலோகத்தில் ஆன ருத்ராட்சம் மூடியுடன் கூடிய சொம்பு, மகாலட்சுமி சிலை, மற்றும் வட்ட வடிவில் தாளம் ஆகிய பழங்கால சிலைகள் கண்டெடுப்பு.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுக்கா பில்லூர் மாங்குடி பகுதியைச் சேர்ந்த செல்வராசு என்பவர் விவசாய கூலி செய்து வருகிறார்.
இவர் வீட்டிற்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி குடிநீர் குழாயிலிருந்து இவரது வீட்டிற்குள் செல்லும் இணைப்பில் திடீரென வீட்டு வாசலுக்கு அருகில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி உள்ளது.
இதன் காரணமாக குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதற்கு செல்வராஜ் முடிவு செய்தார் இதை அடுத்து குழி தோண்டுவதற்காக பணியாளர்களை வேலைக்கு அமைத்தினார். குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்வதற்காக பணியாளர்கள் குழி தோண்டினார்கள் சுமார் மூன்றடி குழி தோண்டப்பட்ட நிலையில், குழிக்கு உள்ளே ஒரு உலோகப் பெட்டி இருந்துள்ளது.இந்த பெட்டியை பார்த்த பணியாளர்கள் செல்வராஜை அழைத்துள்ளனர்.
அங்கு வந்த செல்வராஜ் இந்த உலோக பெட்டியை எடுத்து பார்த்தபோது அதில் பழமையான பெருமாள் சிலை, ஆண்டாள் சிலை, கருடன் சிலை,ஆகிய தெய்வ சிலைகள், உலோகத்தில் ஆன ருத்ராட்சம் மூடியுடன் கூடிய சொம்பு, மகாலட்சுமி சிலை, மற்றும் வட்ட வடிவில் தாளம் ஆகியவை இருந்தன.இதை கண்ட செல்வராஜ் யாரிடம் முறையிடலாம் என எண்ணி ஆலோசித்தார்.
இதுகுறித்து செல்வராஜ் உடனடியாக பேரளம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தார். அதன் அடிப்படையில் நன்னிலம் வட்டாட்சிய ஜெகதீசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.அதன் பின்னர் கண்டெடுக்கப்பட்ட சிலைகள் மற்றும் பொருட்களை போலீசார் தாசில்தார் ஆகியோர் தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இந்த சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இது குறித்து சிலைகள் எப்படி இங்கு வந்தது,இல்லை இதயாராவது புதைத்து வைத்திருப்பார்களா?அல்லது யாரிடமாவது இருந்து கொள்ளையடிக்கப்பட்டதா.இல்லை உண்மையிலே இவைகள் பழங்கால பொருட்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அப்படி இவை உண்மையிலே பழங்கால பொருட்களாக இருந்தால் அவை எந்த காலத்து பொருட்கள் என சோதனை செய்து வருகின்றனர்.
குடிநீர் குழாயில் உடைப்பு சரி செய்ய முற்பட்ட போது புதையல் கிடைத்திருப்பது அந்த பகுதியில் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.