சேலம் ஓமலூரில் அரசு ஊழியர்- விஏஓ வினோத்குமார் மீது கொலை முயற்சி விவகாரத்தில் தமிழகத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்கிற வேதனைக்கேள்வியை எழுப்புகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,” தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதை பதைப்பே இன்னும் அடங்கவில்லை.
அதற்குள்ளாக திருக்கழுக்குன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்ததற்காக சர்புதின் வெட்டிப் படுகொலை, சேலம் ஓமலூரில் அரசு ஊழியர்- விஏஓ வினோத்குமார் மீது கொலை முயற்சி என அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவங்கள் நடக்கின்றனர்.
தமிழகத்தில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்கிற வேதனைக்கேள்வியை எழுப்புகிறது கமிஷனிலும் கலெக்ஷனிலும் இருக்கும் ஆர்வத்தை சட்டம் ஒழுங்கை காப்பதில் இந்த முதல்வர் காண்பிக்க தவறுவதை வன்மையாக கண்டிப்பதுடன், ரவுடிகள் அச்சமின்றி நடைபெறும் இந்த காட்டாட்சியில் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள வேண்டிய அவலநிலை உள்ளதை வருத்தத்துடன் பதிவு செய்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.