கோவை அருகே உள்ள துடியலூர் கதிர்நாயக்கன்பாளையம் குருடிமலை அடிவாரம் அருகே புதியதாக அருள்மிகு சுந்தரவல்லி சுந்தரலிங்கேஸ்வரர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. செப்டம்பர் மாதத்தில் இந்த கோயிலுக்கு கும்பாபிசேக விழா நடைபெறவுள்ளது. மேலும் இந்த கோயிலில் சுந்தரலிங்கேஸ்வரருடன் சுந்தரவல்லி அம்மாளும் ஒரே சன்னதானத்தில் இருக்கும்படி கட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களை சார்ந்த சித்த மருத்துவர்கள், வர்ம கலைஞர்கள் 15 பேர் மற்றும் கஜகஸ்தானைச் சேர்ந்த ஒருவர் என 16 பேர் கொண்ட குழுவினர் ரஷ்ய தமிழர் பேராசிரியர் முருகதாஸ் தலைமையில் கடந்த 14 -ம் தேதி சென்னை வந்து மதுரை, தஞ்சை, திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு சென்று விட்டு தற்போது குருடிமலை அடிவாரம் அருகே புதியதாக கட்டப்பட்டு வரும் சுந்தரலிங்கேஸ்வரர் கோயிலை பார்க்க காரைக்காலைச் சேர்ந்த சித்தர் புத்த கயா அழைப்பின் பேரில் வந்துள்ளனர்.
இவர்களை கோவில் நிர்வாகிகள் ரமேஷ், கனகராஜ், மோகன், தாமு மற்றும் ஊர் பொதுமக்கள் பூ தூவி வரவேற்றனர். கோவில் அர்ச்சகர் சீனிவாசன் ரஷ்யர்களை விபூதி அணிவித்து மாலை அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து கோயில் வளாகத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சித்த நாடி குறித்து ஆலோசனை செய்தனர். மேலும் காரைக்காலை சேர்ந்த சித்தர் புத்த கயா ரஷ்ய நாட்டவர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். இதுகுறித்து ரஷ்ய குழுவை சார்ந்த பேராசிரியர்.முருகதாஸ் கூறும் போது, உலகில் எங்கும் இல்லாத வகையில் கலாச்சாரம், பண்பாடு இந்தியாவில் தான் உள்ளது. அதனை பார்ப்பதற்காகவும், சித்தா, வர்ம கலைகளின் பிறப்பிடமான இந்தியாவிற்கு ரஷ்யா நாட்டை சேர்ந்த மொத்தம் 16 பேர் தனது தலைமையில் வந்துள்ளதாகவும், இவர்கள் தமிழகத்தின் பலஇடங்களிலுள்ள கோவில்கள், சித்தர்கள் ஆலயத்திற்கு வழிபாடு செய்தபிறகு தற்போது கோவைக்கு வந்துள்ளதாக தெரிவித்தனர். மேலும் வாழ்வை உணர்ந்து வாழ, சித்தர்கள் வழியை ரஷ்ய நாட்டவர்களும் என்றார். கொள்ளவே இது போன்ற பயணங்களை மேற்கொள்கிறோம் என்றார் ரஷ்யா மாணவி ஒருவர் கூறும்போது, நாங்கள் புதிய பண்பாடு, காலச்சாரம், சித்தர்களை தெரிந்துகொள்ள வந்துள்ளதாக தெரிவித்தார்.