விழுப்புரம் அருகே பிடாகம் நத்தமேடு பகுதியை சேர்ந்த காசிநாதன் மகன் லட்சுமணன்(35) இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் விழுப்புரம் காவல் நிலையங்களில் உள்ளன. இந்நிலையில் இன்று காலை 7 மணியளவில் விழுப்புரம் ஜானகிபுரம் பைபாஸ் சர்வீஸ் ரோட்டில் நடந்து வந்து கொண்டிருந்த போது, மர்மநபர்கள் சிலர் அவரை மிளகாய் பொடி தூவி கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்க்கு விரைந்து வந்த டிஎஸ்பி சுரேஷ் மற்றும் விழுப்புரம் தாலுகா போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கடந்த 2 நாட்களாகவே அப்பகுதியில் வாலிபர்கள் சிலர் சண்டைபோட்டுக் கொண்டு வந்துள்ளனர். ரவுடிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் வேண்டுமெனறே கூலிப்படையை வரவழைத்து கொலை சம்பவம் நடைபெற்றதா அல்லது முன்விரோதம் காரணமாக கொலை நடைபெற்றதா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர். அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாலும் , பட்டப்பகலில் நடைபெற்ற இக்கொலை சம்பவத்தால் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.