தமிழகத்தில் தொடர்ந்து பல குற்ற சம்பவங்கள் விதவிதமாக நடந்து வருகிறது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு குற்ற சம்பவம் இரு சக்கர வாகன திருட்டு பெரும்பாலும் தற்போது எல்லா வீதிகளிலும், வீடுகளிலும் கூட சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதுடன் சற்று குற்ற சம்பவங்கள் குறைந்தது அதனைத் தொடர்ந்து தற்போது மீண்டும் சிசிடிவி கேமராக்கள் இருந்தும் கூட குற்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலைதான் காணப்படுகிறது காரணம் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனையாக எந்த தண்டனையும் விதிக்கப்படுவதில்லை குறைந்தபட்ச தரணியாகவே சிறையில் அடைப்பு மட்டுமே நிகழ்வதால் தொடர்ந்து அவர்கள் குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
கோவை கடைவீதி அங்கம்மாள் கோயில் வீதியில் குடியிருந்து வரும் ஐ.டி ஊழியர் சுரேஷ்,அவருக்கு சொந்தமான விலை உயர்ந்த டியூக் இருசக்கர வாகனத்தை வீட்டின் அருகே உள்ள தெரு ஓரத்தில் இரவு நிறுத்தி வைத்து விட்டு தூங்க சென்று விட்டார். மீண்டும் வந்து பார்த்த போது இருசக்கர வாகனம் காணாமல் போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் துறையின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அப்பொழுது அந்தப் பகுதியில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது இரண்டு இரு சக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரில் இருவர் அந்த வாகனத்தின் பூட்டை உடைத்து திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் பதிவாகி இருந்தது. பதிவான சி.சி.டி.வி காட்சிகளை வைத்து திருடர்களை தேடி வருகின்றனர். தொடர்ந்து இருசக்கர வாகனங்கள் திருடும் சம்பவங்கள் மாநகரில் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.