தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சி திமுக நகர்மன்ற தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக, திமுக கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. சார்பில் போட்டியிட்ட உமா மகேஸ்வரிக்கு 15 வாக்குகளும், அ.தி.மு.க.வை சேர்ந்த முத்துலட்சுமிக்கு 15 வாக்குகளும் கிடைத்தது. இதனால் குலுக்கல் முறையில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இதனால் நகராட்சி தலைவர் பதவியை கைப்பற்றுவதில் தி.மு.க.-அ.தி.மு.க. இடையே கடும் போட்டி நிலவியது.இந்நிலையில் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஆர்.டி.ஓ. ஹஸ்ரத் பேகம் முன்னிலையில் இன்று காலை நடந்தது.இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட உமாமகேஸ்வரி மனு தாக்கல் செய்தார்.

இதனால் குலுக்கல் முறையில் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து குலுக்கல் முறையில் தி.மு.க.வை சேர்ந்த உமாமகேஸ்வரி நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.இதன் அடிப்படையில் ; தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் நகராட்சியில் மொத்தம் முப்பது வார்டுகள் உள்ளது. இதில் எந்த விதமான தேவைக்கான அடிப்படை வசதிகள் முறையாக செய்யவில்லை. மேலும் திமுக நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரியின் கணவர் பினாமி பெயரில் அரசாங்க நகராட்சி டெண்டர்களை எடுத்து ஊழல் முறை கேட்டில், மோசடியில் ஈடுபட்டு வருவதாக கவுன்சிலர்கள் குற்றசாட்டுகின்றனர்.
அதனால் இன்று நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தை புறக்கணித்து அதிமுக நகர்மன்ற துணைத்தலைவர் கண்ணன் தலைமையில் 13 கவுன்சிலர்கள், திமுக-வை சார்ந்த 10 கவுன்சிலர்கள் மொத்தம் 23 கவுன்சிலர்கள் நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தனித்தனியாக நகராட்சி ஆணையாளர் சபாநாயகத்திடம் நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து மீண்டும் நகர்மன்ற தலைவர் தேர்தல் நடத்த வேண்டும் என்று நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்தனர்.

சங்கரன்கோவில் நகராட்சி திமுக நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி மீது அதிமுக, திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று அதிமுக, திமுக கவுன்சிலர்கள் நகராட்சி ஆணையாளரிடம் மனு அளித்த சம்பவம் சங்கரன்கோவில் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.