கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று 6 பயணிகள் மற்றும் விமானி ஒருவருடன் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 4 குழந்தைகளும் பயணித்தனர்.
இந்த நிலையில், திடீரென விமானம் கோளாறு காரணமாக விபத்தில் சிக்கியது. விமானத்தில் என்ஜினில் பழுது ஏற்பட்டு உள்ளது. இதனால், விமானி அவசரநிலையை அறிவித்து உள்ளார். இதன்பின் விமானம் வன பகுதிக்குள் விழுந்து நொறுங்கி உள்ளது. இதனால், வனப்பகுதியில் விழுந்த விமானத்தை தேடும் முயற்சியில் பல சிரமங்கள் ஏற்பட்டது.
40 நாட்களாக விமானம் விழுந்த அமேசான் வன பகுதியில் தீவிர தேடுதல் வேட்டை நடந்தது. இதில், விமானத்தில் பயணித்த விமானி, சிறுவர்களின் தாயார் உள்பட 3 பெரியவர்கள் உயிரிழந்தது தெரிய வந்தது. ஆனால், சிறுவர்கள் 4 பேர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை.விபத்தில் சிக்கிய குழந்தைகளில் 11 மாத குழந்தை மற்றும் 4 வயது சிறுவனும் அடங்குவார்கள்.
ஆனால் மீட்புப் படையினர் தேடுதலில் 4 குழந்தகளும் கிடைக்கவில்லை.ஆனால் அவர்கள் உயிரிழக்கவில்லை என்பது மட்டும் தெரிந்தது.தொடர்ந்து மீட்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஏடுபட்டனர்.இந்த தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர், பொதுமக்கள் எனப் பலரும் இம்முயற்சியில் ஈடுபட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து மே மாதம் ஒரு பெரும் தேடுதல் வேட்டை துவங்கியது. தேடலில் ஈடுபட்டிருந்தோர் குழந்தைகள் விட்டுச்சென்றிருந்த சில பொருட்களைக் கண்டறிந்தனர் அதில் ஒரு பாட்டில், ஒரு கத்திரிக்கோல், ஒரு ஹேர்பேண்ட், மற்றும் ஒரு தற்காலிக வசிப்பிடம்.
சிறு கால்தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம், தேடலில் ஈடுபட்டிருந்தோர் குழந்தைகள் காட்டுக்குள் உயிருடன் இருப்பதாக நம்பினர். இக்காட்டில், ஜாகுவார் எனப்படும் வகைச் சிறுத்தைகள், பாம்புகள், மற்றும் பல்வேறு பயங்கர மிருகங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
40 நாட்களுக்கு பிறகு அமேசான் காடுகளில் தொலைந்து போயிருந்த நான்கு குழந்தைகள் தற்போது மீட்கப்பட்டுள்ளனர்.ராணுவத்தினர் மற்றும் பழங்குடியினர் உள்ள புகைப்படத்தை வெளியிடப்பட்டது.கொலம்பியாவின் அதிபர் குஸ்தாவோ பெத்ரோ, இக்குழந்தைகள் மீட்கப்பட்டிருப்பது, ‘நாடு முழுவதையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருப்பதாகக்’ கூறியிருக்கிறார்.
அதிபர் குஸ்தாவோ பெத்ரோ, குழந்தைகள் மீட்கப்பட்ட நாளை ‘அற்புத நாள்’ என்று வர்ணித்தார். மேலும், “அவர்கள் தனித்து இருந்தனர். சுயமாக அவர்கள் பல இடர்ப்பாடுகளைச் சமாளித்துப் பிழைத்ததன் மூலம் வரலாற்றில் இடம்பிடித்திருக்கின்றனர்,” என்றார்.
மேலும் குழந்தைகளுக்கு மருத்துவ உதவிகள் வழங்கப்படு வருவதாக அதிபர் பெத்ரோ கூறினார்.மீட்கப்பட்டக் குழந்தைககள் நாட்டின் தலைநகரான பொகோதாவிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர். அங்கிருந்து அவர்கள் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றனர்.என்று அரசு தெரிவித்துள்ளது.