சாட்டை துரைமுருகன்
நீதிமன்ற காவலுக்கு அழைத்து வரப்பட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை காவலில் அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டார். வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், காவலில் அனுப்ப கோர்ட் மறுத்துவிட்டது. தென்காசி மாவட்டம் குற்றாலத்திற்கு குளிக்க வந்திருந்த போது நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். முன்னள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறு பரப்பியதாக திமுக ஐடி விங் கொடுத்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டிருந்தார். வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

நான் பாடிய பாடல் அதிமுக உடையது..
சாட்டை துரைமுருகன் கைதுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்தார். இதேபோல் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகனை காவலில் அனுப்ப நீதிபதி மறுத்துவிட்டார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், காவலில் அனுப்ப கோர்ட் மறுத்துவிட்டது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். திருச்சி மாவட்ட கணினி சார் குற்றப்பிரிவு கோர்ட்டில் சாட்டை துரைமுருகன் நேற்று மாலை ஆஜர்படுத்தப்பட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சுவாமி நாதன், சாட்டை துரைமுருகனை காவலில் அனுப்ப தேவையில்லை எனக் கூறி விடுவித்தது. வன் கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 5 பிரிவுகளின் கீழ் சாட்டை துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றம் விடுவித்தது.
திமுக ஐடி விங்
விக்கிரவாண்டி சட்டசபைக்கு இடைத்தேர்தல் கடந்த 10ம் தேதி நடந்தது. இதில் 82.48% வாக்குகள் பதிவு ஆனது. இந்த தேர்தலில் அதிமுக போட்டியிடாததால், திமுக – பாமக – நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி உள்ளது. இதில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிராமிக்கு ஆதரவாக வாக்கு கேட்டு சாட்டை துரைமுருகன் பேசியிருந்தார். அப்போது தான் அவர் முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோர் குறித்து அவதூறாக பேசினார். முதல்வரை கடுமையாக விமர்சனம் செய்து, கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார். இதையடுத்து தான் திமுக ஐடி விங் சார்பில் சாட்டை துரைமுருகனுக்கு எதிராக திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதில் வழக்கு பதிவு செய்த போலீசார், குற்றாலத்திற்கு குளிக்க வந்த சாட்டை துரைமுருகனை கைது செய்திருந்தனர்.