- திருவள்ளூர் தாலுகா அலுவலகம் எதிரே சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் என்ற ‘ங்கோ’ அமைப்பின் மூலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த சுமார் 1கோடி மதிப்பிலான அரசு நிலம் மீட்பு: ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்பு இடத்தில் இருந்த கட்டிடங்கள் திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் முன்னிலையில் அகற்றப்பட்டு வருகிறது
திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான அரசின் சொத்துக்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் இடங்களை மீட்கும் பணியில் திருவள்ளூர் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் தீவிரமாக செயல்பட்டு வருகிறது
குறிப்பாக திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த சுமார் 50 கோடி மதிப்பிலான சொத்துக்களை தனிநபர் ஆக்கிரமித்து செய்து பயன்படுத்தி வந்த நிலையில் வருவாய் துறையினர் அதிரடியாக மீட்டு தற்பொழுது நகராட்சி சார்பில் அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகிறது
இதனை தொடர்ந்து திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே இருந்த தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் என்ற என் ஜி ஓ வால் 30 ஆண்டுகளுக்கு மேலாக சுமார் ஒரு கோடி மதிப்பிலான அரசு இடத்தினை ஆக்கிரமிப்பு செய்து தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம், ஜெராக்ஸ் கடை உள்ளிட்டகைகளுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்த நிலையில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான அரசு இடத்தினை திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் கட்டிடங்களை இடிக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் திருவள்ளூர் நகராட்சிக்கு சொந்தமான நகராட்சி பூங்காக்கள் நீர்நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்கள் தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் அதனை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி அரசு சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் மற்றும் திருவள்ளூர் வட்டாட்சியர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது