ரியல் எஸ்டேட் மேல் முறையீட்டு தீர்ப்பாயம் அதிரடி.! சாதகமாக பறந்த உத்தரவு.!

0
53
சிசிடிவி

அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், வீட்டு உரிமையாளர்கள் தனிப்பட்ட முறையில், ‘சிசிடிவி’ எனப்படும் கண்காணிப்பு கேமராக்களை அமைக்கலாம் என, ரியல் எஸ்டேட் மேல் முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் குற்ற சம்பவங்கள் நிகழாத வகையிலும், அவைகளை தடுக்கும் வகையிலும், கண்காணிப்பு கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்கள் மூலம் பல்வேறு குற்ற செயல்களும் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குற்றவாளிகளும் கைதாகி உள்ளனர்.

கேமராக்கள்:

இந்த கேமரா இருப்பதாலேயே, குற்றங்களில் அவ்வளவாக ஈடுபடாமல் நழுவி செல்லும் ஆசாமிகளும் உண்டு. குற்றங்களை விரைவாகக் கண்டறியவும், வழக்கு தொடர சிறந்த ஆதாரங்களாகவும் இந்த கேமராக்கள் திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்த கேமரா ஆங்காங்கே உள்ளதால்தான், பெண்கள், குழந்தைகளுக்கு பொது இடங்களில் பாதுகாப்பு உணர்வும் கிடைக்கிறது.

அதேபோல, வீடுகளிலும் இந்த சிசிடிவி கேமராக்களை பலர் பொருத்தி வைத்திருக்கிறார்கள்.. கொள்ளையர்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய, வீடுகளில் எப்போதுமெ சிசிடிவி கேமராவை பொருத்துவது நல்லது. குழந்தைகளின் பாதுகாப்பிற்கு இது மிகவும் அவசியமும் கூட. அதேசமயம், வீட்டிற்கு யார் வருகிறார்கள் என்பதையும் கண்காணிக்கலாம்.

அந்தவகையில், அடுக்குமாடி குடியிருப்புகளிலும், பாதுகாப்புக்காக, பொது பயன்பாட்டு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுகின்றன. திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுப்பதற்காக, இந்த வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று காவல் துறையினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் லேக் ஏரியா பகுதியில், ஏஎன் பில்டர்ஸ் என்ற நிறுவனம் சார்பில், அபார்ட்மென்ட் ஒன்று கட்டப்பட்டது.

ரியல் எஸ்டேட் தீர்ப்பாயம்:

இதில், ஆறு வீடுகளை வெவ்வேறு நபர்கள் வாங்கியிருக்கிறார்கள். இதில், வளாக பாதுகாப்புக்காக பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை, கட்டுமான நிறுவனம் அமைத்தது. இதன், IB முகவரி எனப்படும் அடையாள பெயர், ரகசிய குறியீடு விபரங்களை கட்டுமான நிறுவனம், வீடு வாங்கியவர்களுக்கு தரவில்லை.
இதன்காரணமாக, வீட்டின் உரிமையாளர்கள் அருளப்பா, பிரேமலதா ஆகியோர் தொடர்ந்த வழக்கு, ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தீர்ப்பாய தலைவர் நீதிபதி துரைசாமி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு இதுதான்:

“மனுதாரர்கள் முன்வைத்த சில கோரிக்கைகள் ஏற்புடையதாக
இருப்பதால், இந்த குடியிருப்பு வளாகத்தில், பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவின் ஐபி அட்ரஸ், ரகசிய குறியீடு விபரங்களை, வீடு வாங்கியவர்களிடம்,
கட்டுமான நிறுவனம் வழங்க வேண்டும்.

சிசிடிவி கண்காணிப்பு:

வீட்டு உரிமையாளர்கள் என்ற அடிப்படையில், மனுதாரர்கள் தங்கள் பாதுகாப்புக்காக தனியாக கண்காணிப்பு கேமராக்களை அமைக்க அனுமதிக்கிறோம். மற்றவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தை பாதிக்காத வகையில், இந்த வசதியை வீட்டு உரிமையாளர்கள் ஏற்படுத்திக் கொள்ளலாம்” என்று தீர்ப்பு தரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here