புத்தகம் படிப்பது என்பது ஒரு கலை. அதில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சு.
பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் வகையில் ‘பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ என்ற பெயரில் புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் இன்று துவக்கி வைக்கிறார். பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கவும், அவர்களது திறமையை ஊக்குவிக்கவும் ‘பள்ளிகளில் வாசிப்பு இயக்கம்’ என்ற இயக்கத்தை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை முன்னெடுத்துள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- “மாணவர்களிடையே புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுப்பதற்காக பள்ளிகளில் நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. ஒவ்வொரு வகுப்புக்கும் நூலகப் பாடவேளை வாரம் ஒருமுறை வழங்கப்பட்டுள்ளது. இப்பாடவேளைகளை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் வாசிப்பு திறன் மற்றும் படைப்பாற்றலை வளத்துக்கொள்ள தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை திட்டம் தீட்டியுள்ளது.
தஞ்சாவூரில் மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் ஆகியவை இணைந்து 56 ஆவது தேசிய நூலக வார விழா, மகிழ்ச்சி திருவிழாவாக மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு அனைத்து பள்ளி மாணவர்களின் திருக்குறள் விளக்க கண்காட்சியினை பார்வையிட்டு பள்ளி மாணவர்களை பாராட்டினார்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசும்போது ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் உணவு இடைவேளையின் போது அங்குள்ள நூலகத்தில் வாசிப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. மாணவர்கள் அங்கு சென்று படிக்க வேண்டும். அந்தப் புத்தகத்தை படித்து அவர்கள் உள்வாங்கியுள்ள கருத்துக்களை கட்டுரைகளாகவோ, ஓவியமாகவோ வரையலாம் என்று பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. புத்தகம் படிப்பது என்பது ஒரு கலை. அதில் அனைவரும் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

பள்ளி நூலகங்களையும் பாடவேளைகளையும் முறையாகப் பயன்படுத்தவும், அவற்றின் பயன்பாடு மாணவர்களை நன்கு சென்றடையவும் பாடநூல்களுக்கு வெளியே புத்தக வாசிப்பை ஒரு வாழ்வியல் முறையாக மாணவர்கள் ஏற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு செயல்படவும் நூலக பாடவேளைகளையும் மற்றும் பள்ளி நூலகங்களை முறையாகப் பயன்படுத்திடவும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
புத்தகத்தை வாங்கி படிக்கும்போது தான் நினைவாற்றல் அதிகமாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள் என்று பேசினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப், அரசு கொறடா கோவி. செழியன், எம்பி ராமலிங்கம், மேயர் ராமநாதன் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள், நூலக வாசகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.