கோவை விமான நிலையத்தில் பிடிபட்ட அரியவகை விலங்கினங்கள். விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை. கோவை மாவட்டம், விமான நிலையத்தில் பெட்டிகளை சோதனை செய்த போது, மர்மமான 3 பெட்டிகளை சோதனை செய்ததில், வெளிநாட்டில் இருந்து அரிய வகை விலங்குகளை கடத்தி வரப்பட்டது, என சோதனையில் தெரியவந்தது.

மேலும் பயணியாளர்கள் கடந்த 6 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று ஏறி, கோவை விமான நிலையத்தில் அதிகமான பயணிகள் வந்துள்ளனர். அதனை தொடர்ந்து, பெட்டி சோதனை செய்யும் போது மெஷின்லில் சோதனை செய்வதற்கு பயந்த 3 பயணிகள் கொண்டு வந்த பெட்டியை, அப்படியே வைத்து விட்டு ஓடி சென்றுள்ளனர். கோவை விமான நிலையத்தில் ஒருநாள் முழுவதும், அந்த 3 பெட்டிகள் அங்கேயே இருந்ததால், விமான நிலைய அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.

அப்போது அந்த 3 பெட்டியை யார் எடுத்து வந்தார்கள் என்று சிசிடிவி கண்காணிப்பு கேமிரா மூலம் சோதனை செய்தனர். அப்போது கடந்த 6 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து விமானம் ஒன்று ஏறி, கோவை விமான நிலையத்தில் வந்த 3 நபர்கள் பெட்டி எடுத்து வந்து, வைப்பது தெரியவந்தது. அதனை தொடர்ந்து 3 பெட்டிகளை எடுத்து வந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் 3 பேரும் சிங்கப்பூரில் இருந்து வந்தவர்கள் என்று தெரியவந்தது.

பின்னர் அவர்களை அலைபேசி எண்ணை அழைத்து தொடர்பு கொண்டு, விமான நிலையத்திற்கு வரவழைத்தனர். அதனை தொடர்ந்து அந்த 3 பேரில் 2 பேர் டொமினிக், ராமசாமி என்ற இருவர் மட்டுமே கோவை விமான நிலையத்தில் விசாரணைக்கு வந்தனர். ஆனால் அந்த ஒரு நபர் மட்டும் வரவில்லை. இது குறித்து விசாரணை மேற்கண்ட போது, இந்த 3 பெட்டியில் சிங்கப்பூரில் இருந்து அரிய வகையான விலங்குகளை கடத்தி வரப்பட்டு, வெளிநாட்டு ஊயிரினங்கள் 11000 ஆமைகள், சிலந்தி வகைகள், அரியவகை பாம்புகள் போன்றவற்றை இருப்பது தெரியவந்தது.

பின்னர் உடனடியாக சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் வனத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.மேலும் அரியவகை வெளிநாட்டு விலங்குகள் என்பதால் மீண்டும் சிங்கப்பூருக்கு அனுப்பபட்டு, சுங்கத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகின்றனர். விசாரணைக்கு வராத நபர் குறித்தும் சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.