மண்டையை பிளக்கும் வெயில் .. வாடிகையாளர்களுக்கு குளுகுளு அமைப்பை ஏற்படுத்திய தேனீர் கடை…

2 Min Read
தென்றல் தேநீர் கடை

வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று நேரம் இளைப்பாற பணிச்சாரல் போல் தண்ணீரை பீச்சி அடித்து வாடிக்கையாளர்களை கவரும் தேநீர் கடை.

- Advertisement -
Ad imageAd image

வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தொடர்ச்சியாக மாவட்டத்தின் வெப்ப நிலை செஞ்சுரி அடித்து வரும் நிலையில் தற்போது 104 டிகிரி பேரனிட் வரை நீண்டு வருகிறது

இதனால் காலை 10 மணி முதலே அதிகப்படியான வெப்பம் நிலை  நம்மால் உணர முடிகிறது  சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் இதன் காரணமாக கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் கன்னிகாபுரம் சிஎம்சி மருத்துவமனை அருகே புதிதாக தென்றல் என்ற தேநீர் கடையில் மிஸ்ட் போன்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்தக் கடை வளாகத்தின் முன்பகுதியில் மிஸ்ட் என கூறப்படும் பணி சாரலுக்கு நிகராக நவீன இயந்திரம் மூலம் செயற்கை முறையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் பீச்சி அடிக்கும் அமைப்பை ஏற்படுத்தியுள்ளனர் .

இதன் காரணமாக கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து சற்று நேரம் இளைப்பாரி  வெயிளை மறந்து நிம்மதியாக தேநீர் மற்றும் உணவுப் பொருட்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் உண்டு செல்கின்றனர்

இதுகுறித்து அந்த கடையின் உரிமையாளர் வெங்கடசுப்புவை நாம் தொடர்பு கொண்டபோது ,  வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய இரு மாவட்டங்களில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும் வாடிக்கையாளரின் நலன் கருதி தான் அமெரிக்காவில் டிஸ்னி வேர்ல்ட் பகுதிகளில்  , அதிக வெப்பம் உள்ள காலங்களில் பயன்படுத்தப்படும் இந்த அமைப்பை ,  சோதனை முயற்சியாக தனது கடையில் நிறுவியதாக தெரிவித்தார் .

மேலும் இந்த சோதனை முயற்சிக்கு வாகன ஓட்டிகள் மற்றும் வாடிக்கையாளர் இடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் கூடிய விரைவில் அவருக்கு சொந்தமான மற்ற தேநீர் கடைகளிலும் இதுபோன்ற செயல்முறை அமைக்கப்படும் என தெரிவித்தார்.

Share This Article
Leave a review