கதிரவனின் ஆதரவாளர்களில் ஒருவர் எழுந்து ‘கதிரவனின் பெயரைச் சொல்’ எனக் கூறிக் கூட்டத்தில் சத்தம் போட்டார். அதற்கு கருப்பு முருகானந்தம், ’கூட்டத்திற்கு வராதவர் பெயரெல்லாம் சொல்ல முடியாது’என்று கூறினார். உடனே பா.ஜ.க நிர்வாகிகள் கேள்வி எழுப்பியவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியே அனுப்பினர்.
இராமநாதபுரம் பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் அடிதடி- போர்க்களமானது எப்படி?
ராமநாதபுரத்தில் பாஜக வின் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, கூட்டணி கட்சிகளுடன் எப்பட நடந்து கொள்வது என்ற ஆலோசணைகள் வழங்க கூட்டம் நடத்தப்பட்டது.

அப்போது பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் பேசத் தொடங்கினார்.அவர் பேசும் போது, அழைப்பில் இருந்த ஒவ்வொருவர் பெயராக வாசித்தார்.அப்படி வாசிக்கும் போது ராமநாதபுரம் முன்னாள் மாவட்டத் தலைவர் கதிரவன் பெயரை சொல்லவில்லை.ராமநாதபுரம் முன்னாள் மாவட்டத்தலைவர் கதிரவன் கூட்டத்திற்க்கு வரவில்லை. இதனால், கதிரவனின் ஆதரவாளர்களில் ஒருவர் எழுந்து ‘கதிரவனின் பெயரைச் சொல்’ எனக் கூறிக் கூட்டத்தில் சத்தம் போட்டார். அதற்கு கருப்பு முருகானந்தம், ’கூட்டத்திற்கு வராதவர் பெயரெல்லாம் சொல்ல முடியாது’என்று கூறினார். உடனே பா.ஜ.க நிர்வாகிகள் கேள்வி எழுப்பியவரை அங்கிருந்து அப்புறப்படுத்தி வெளியே அனுப்பினர்.

கூட்டம் முடிந்து கருப்பு முருகானந்தம் மேடையை விட்டு கீழே இறங்கி சென்றார். அப்போது, மீண்டும் அந்த நபர் வந்து, ’ஏன் கதிரவன் பெயரை சொல்லவில்லை?’எனக் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், தரணி முருகேசன் ஆதரவாளர்களுக்கும், கதிரவன் ஆதரவாளர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கேள்வி எழுப்பிய வரை தரணி முருகேசன் ஆதரவாளர்கள் நாற்காலியைக் கொண்டு அடித்து விரட்டினர். இதனால், பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.