விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே கொத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் மகன் ராமு என்கிற ராமச்சந்திரன் வயது 18. இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு மாட்டு வண்டியில் கரும்பு ஏற்றும் தொழில் செய்து வந்தார். இவரது தந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் இவரது மூத்த சகோதரி கடந்த ஆண்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாயார் மணிமேகலை கரும்பு வெட்டும் தொழிலுக்காக ஈரோடு மாவட்டத்திற்கு சென்றுவிட்ட நிலையில் தனது பாட்டியுடன் கொத்தனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் வசித்து வந்தார். இது நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு 8 மணி அளவில் சரவணா பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே அதே ஊரை சேர்ந்த மோகன்ராஜ், கந்தசாமி ஆகியோர் குடிபோதையில் இருந்துள்ளனர் இந்த நிலையில் இருவரும் ராமச்சந்திரனிடம் சண்டை போட்டுள்ளனர். அப்போது இதற்கு முன்னர் இருந்த முன் விரோதம் தொடர்பாக ஒருவருக்கொருவர் மிரட்டி கொண்டதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் இரவு நேரத்தில் ராமச்சந்திரன் அவரது வீட்டுக்கு சென்று அருகே இருந்த துணியால் கட்டிய ஊஞ்சலில் படுத்து தூங்கினார். இரவு பத்து மணி அளவில் அங்கு வந்த மோகன்ராஜ் மற்றும் கந்தசாமி ஆகியோர் ஊஞ்சலில் தூங்கிக் கொண்டிருந்த ராமச்சந்திரனின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தனர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது பாட்டி பூச்சி விட்டதை கண்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அதற்குள் மோகன்ராஜ், கந்தசாமி ஆகிய இருவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர் தகவல் அறிந்த திருவெண்ணைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் ராமச்சந்திரன் பெரிய செவலையையைச் சேர்ந்த கந்தசாமி திருவெண்ணைநல்லூரை சேர்ந்த மோகன்ராஜ் ஆகிய மூவரும் நண்பர்களாக கஞ்சா வழிப்பறி மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மோகன்ராஜ் திருவெண்ணெய்நல்லூர் மற்றும் திருநாவலூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சமீபத்தில் தான் சிறையில் இருந்துள்ளார். தான் சிறைக்கு வந்த பிறகும் ராமச்சந்திரன் தன்னுடன் சகஜமாக பேசி பழகவில்லை என்ற கோபம் அவர் மீது இருந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் தன்னை பற்றி ராமச்சந்திரன் தான் போலீசில் சில தகவல்களை கூறி சிறைக்குச் செல்ல காரணமாக இருந்திருப்பாரோ என்ற சந்தேகமும் அவருக்கு இருந்ததால்தான் அவருடன் வம்பு இழுத்து சண்டை போட்டுள்ளார் பின்னர் அன்று இரவு ராமச்சந்திரன் படுத்து தூங்கிய போது மோகன்ராஜ் கந்தசாமி மடப்பட்டு சேர்ந்த கஜேந்திரன் வெற்றிவேல் உள்ளிட்ட மற்றும் ஒருவர் உள்ளிட்டநான்கு பேர் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியது தெரிய வந்தது.
இதையடுத்து நான்கு பேரும் கைது செய்யப்படாததை கண்டித்து ராமச்சந்திரனின் உறவினர்கள் கடலூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர் சம்பவம் அறிந்து விரைந்து சென்ற திருவெண்ணைநல்லூர் போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். பின்னர் விழுப்புரம் டிஎஸ்பி பார்த்திபன் தலைமையிலான தனிப்படை தலைவராக இருந்த நான்கு பேரையும் கைது செய்தது.