நரிக்குடியில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் ராமநாராயணன்.
இந்நிலையில் நரிக்குடி அருகே தாமரைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசந்தன கருப்பண்ணசாமி, முனியப்பசாமி கோவில் திருவிழாவில் நாடக நிகழ்ச்சி மற்றும் மைக் செட் அமைப்பதற்காக அனுமதி கோரி அந்த கோவில் நிர்வாகத்தைச் சேர்ந்த தச்சனேந்தல் செந்தூர் செல்வன் என்பவர் நரிக்குடி காவல் நிலையத்தில் ஆய்வாளர் ராமநாராயனனிடம் அனுமதி கோரியுள்ளார்.
அதற்காக அவர் ரூ.5,000 லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறதுலஞ்சம் கொடுக்க விரும்பாத கோவில் நிர்வாகத்தினர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் உதவியை நாடியுள்ளனர்.
இதனை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய நோட்டுக்களை கோவில் நிர்வாகத்தினர் ஆய்வாளர் ராமநாராயனனிடம் வழங்கியுள்ளனர்.
அப்போது அங்கு மறைந்திருந்த ஏடிஎஸ்பி ராமச்சந்திரன், ஆய்வாளர் சால்வண்துரை தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆய்வாளர் ராமநாராயணனை கையும் களவுமாக கைது செய்தனர்.
கிராம பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு காவல் நிலையத்தில் லஞ்சம் கேட்டு பெற்றது இப்பகுதி பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.