- ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயண இரண்டாம் ஆண்டு வெற்றி விழா மற்றும் மத்திய அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் பரப்புரை இயக்கம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி துணைதலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு 2 ஆம் ஆண்டு வெற்றி விழாவையொட்டியும் நாட்டின் பன்முக பண்பாட்டை பாதுகாத்திடவும் 90 விழுக்காடு மக்களின் சமூக நீதி அளிக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என வலியுறுத்தி தஞ்சை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி பகுதியில் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் பரப்புரை இயக்கம் இன்று நடைபெற்றது.
பிரச்சார இயக்கத்திற்கு மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வைத்தார். இயக்கத்தில் பொதுக் குழு உறுப்பினர்கள் ஏ. ஜேம்ஸ், வயலூர் எஸ். ராமநாதன், மாநகர மாவட்ட துணைத் தலைவர் ஜி. லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.