எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி முதன்முறையாக இன்று பயணம் செய்ய உள்ளார். இந்த பயணத்தின்போது, பொது கூட்டம் ஒன்றில் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களிடையே ராகுல் காந்தி உரையாற்ற திட்டமிட்டு உள்ளார். மேலும் சாலை வழி பேரணி செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியை மனதில் வைத்துக்கொண்டு , காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அண்மையில் பேசிய பதிவு , ஒட்டுமொத்த மோடி சமூகத்தையே இழிவுபடுத்துவதாகவுள்ளது என்று கூறி அவர் மீதி குஜராத் மாநிலத்தில் அவதூறு வழக்கு ஒன்று பதிவுசெய்யப்பட்டிருந்தது .
இந்த வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் வயநாடு நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது.
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்புக்கு எதிராக காங்கிரஸ் கட்சிக்காரர்கள் நாடு முழுவதும் தீவிர ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடாளுமன்றத்திலும் கூட இந்த விசயம் எதிரொலித்தது. இதனால், அவை நடவடிக்கைகள் முடங்கின.
இந்நிலையில் எம்.பி. பதவி தகுதி நீக்கத்திற்கு பின் கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு முன்னாள் எம்.பி.யான ராகுல் காந்தி முதன்முறையாக இன்று பயணம் செய்ய உள்ளார். இந்த பயணத்தின்போது, பொது கூட்டம் ஒன்றில் கட்சி தொண்டர்கள் மற்றும் மக்களிடையே ராகுல் காந்தி உரையாற்ற திட்டமிட்டு உள்ளார். மேலும் சாலை வழி பேரணி செல்லவும் திட்டமிடப்பட்டு உள்ளது.