அண்ணாமலைக்கு எதிராக கொந்தளிக்கும் திமுகவினர் நானும் வழக்கு தொடுப்பேன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

2 Min Read
உதயநிதி அண்ணாமலை

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திமுகவினரின் ஊழல் பட்டியலை வெளியிட போகிறேன் என்று அறிவித்திருந்த அண்ணாமலை திடீரென திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டார். அத்தோடு தன்னிடம் கேட்கப்பட்ட ரபேல் வாட்ச் பில்லினையும் வெளியிட்டார். அதனை தொடர்ந்து திமுக, பாஜக மற்றும் அதிமுகவினரிடையே சலசலப்பு நிலவி வருகிறது. ஒரு பக்கம் பாஜக கூட்டணியில் இருந்தாலும் அதிமுக அண்ணாமலைக்கு எதிராக ஒரு மாபெரும் அறிக்கை போரை முன்னாள் அமைச்சர்களை கொண்டு நடத்தி வருகிறது.

- Advertisement -
Ad imageAd image

பாஜக தலைமையுடன் தான் கூட்டணி அண்ணாமலையுடன் இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவிக்கிறார்.

இபிஎஸ் ஜெயக்குமார்


அண்ணாமலைக்கெல்லாம் பதில் சொல்லத் தேவையில்லை என்கிறார் முன்னாள் முதல்வர் இபிஎஸ். எங்களுக்கு யாரும் பங்காளிகள் இல்லை ஊழல் செய்கிற எல்லோரும் பகையாளிகள் தான் என்கிறார் ஒரு பக்கம் அண்ணாமலை. நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில் இப்படி கூட்டணிக்குள்ளே குழப்பம் ஏற்பட்டிருப்பது பாஜக தலைமைக்கு ஒரு வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கிடையில் கர்நாடகா தேர்தல் வேறு ஒரு பக்கம் பாஜகவை டென்ஷன் ஆக்கிக் கொண்டிருக்கிறது.

ஆர் எஸ் பாரதி


இந்த நிலையில் திமுக மீதான குற்றச்சாட்டுகளுக்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ரூ.500 கோடி இழப்பீடு வழங்காவிட்டால் சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். அந்த நோட்டீஸில், “உங்கள் பேச்சு, குற்றச்சாட்டுகளுக்குப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உங்கள் சமூக ஊடகப் பக்கங்கள், இணையதளத்தில் இதுதொடர்பான வீடியோவை நீக்கவேண்டும்.இழப்பீட்டுத் தொகையாக ரூ.500 கோடி வழங்க வேண்டும். அது முதல்வர் பொது நிவாரண நிதிக்குச் செலுத்தப்படும். இந்த அறிவிப்பு கிடைத்த 48 மணி நேரத்துக்குள் இவற்றைச் செய்யத் தவறினால், உங்களுக்கு எதிராக சிவில், கிரிமினல் வழக்கு தொடரப்படும்” என்று கூறப்பட்டிருந்தது. மேலும், திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியும் முதல்வர் அனுமதியுடன் அண்ணாமலைக்கு எதிராக வழக்கு தொடர உள்ளதாக அறிவித்திருந்தார்.

உதயநிதி ஸ்டாலின்

இந்த விவகாரம் குறித்து திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம் அண்ணாமலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு உதயநிதி ஸ்டாலின் பதில் கூறுகையில், “என்ன என்கிட்ட மட்டும் இவ்வளவு கேள்வி கேட்கறீங்க.. அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்திக்கும் போது மட்டும் ஸ்கூல் டீச்சர் மாதிரி பேசுவதை மட்டும் கேட்டுட்டு வரீங்க.. அண்ணாமலை ஆதாரமற்று ஏதேதோ பேசி வருகிறார். அவர் மீது நானும் மான நஷ்ட வழக்கு தொடர உள்ளேன். திமுக மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அண்ணாமலையை அதெப்படி சும்மா விடுவோம்” என்று தெரிவித்தார்.

Share This Article
Leave a review