விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் அளவுக்கதிகமாக செம்மண்ணள்ளியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு இன்று வழக்கு விசாரணை நடைபெற்றது.இந்த வழக்கு விசாரணைக்கு அமச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் கவுதமசிகாமணி ஆகியோர் ஆஜராகவில்லை.இந்த வழக்கில் இதுவரை 9 பேர் பிறழ் சாட்சியாக மாறி உள்ளனர்.
தமிழகத்தில் கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடந்தது. அப்போது உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்த க.பொன்முடிதான் கூடுதலாக கனிமவளத்துறையையும் கவனித்து வந்தார். பொன்முடி கனிம வளத்துறையில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.இந்த செம்மண் குவாரியை பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதமசிகாமணி மற்றும் நன்பர்கள்,உறவினர்கள் ஆகியோர் பெயரில் எடுத்து நடத்திவந்தனர்.

இதுதொடர்பாக அமைச்சர் க.பொன்முடி, அவரது மகன், பொன்.கௌதமசிகாமணி எம்.பி., உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் கடந்த 2012-ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் வழக்குத் தொடுத்தனர்.
இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லோகநாதன் இறந்து விட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக 67 பேர் சேர்க்கப்பட்டு, செப்டம்பர் 7-ஆம் தேதி வரை 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பிறழ் சாட்சியமளித்தனர்.சாட்சியமளித்த அனைவரும் அரசு அதிகாரிகளாக இருந்து ஓய்வு பெற்றவர்கள்.

இந்நிலையில் இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியமாக மாறி வருவதால், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் தன்னையும் அனுமதிக்கக் கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் டி.ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி மனுதாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையையடுத்து அக்டோபர்3-ஆம் தேதி அவரது மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.அதற்கு பொன்முடி தரப்பில எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது,தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணை நடை பெற்று வருகிறது.
மீண்டும் இன்று வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கில் பொன்முடிம் மற்றும் அவரது மகன் ஆஜராகவில்லை.தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் விசாரணையை நீதிபதி அடுத்த மாதம் 6 ம் தேதிக்கு மாற்றி உத்தரவிட்டார்..