பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் சீக்கியர்களின் புனிதத்தலமாக கருதப்படும் பொற்கோவில் அருகே நேற்று முன்தினம் இரவு மூன்றாவது முறையாக குண்டு வெடித்ததால் அந்த பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதை அடுத்து பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது இந்த சம்பவம் தொடர்பாக பஞ்சாப் டிஜிபி கௌரவ் யாதவ் கூறியதாவது.
ஒரு கோயில் உலகத்தில் உள்ள குரு ராமதாஸ் நிவாஸ் கட்டிடம் அருகே குண்டு வெடித்தது இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை உயிர் சேதமும் இல்லை மிகக் குறைந்த சக்தி உடைய குண்டு வெடித்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினார். மேலும் சந்தேகத்திற்குரிய நபரின் புகைப்படத்தையும் அவர் வெளியிட்டார்.
இதுகுறித்து சிரோமணி குருத்துவாரா பிரபந்த கமிட்டி தலைவர் அர்ஜுந்தார் சிங் தாமி கூறுகையில்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பொற்கோவில் அருகே மூன்று முறை குண்டுகள் வெடித்துள்ளது. முதல் இரண்டு சம்பவங்களுக்கு பின்னும் போலீசார் எச்சரிக்கடன் செயல்படாததே மூன்றாவது குண்டு வெடிப்புக்கு காரணம் என்றார். தொடர்ந்து பொற்க்கோவில் வலாகத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.