என்ன தவறு செய்தேன், ஏன் வெட்டினீர்கள்”உருக்கமான வரிகளுடன் புங்கை மரம் பேசும் பேனர்

1 Min Read
புங்கை மரம் பேனர்

மனித சமூகத்திற்கு சுவாசத்தை கொடுத்த மரத்தை யாரோ வெட்டி சாய்த்திருக்கிறார்கள்

- Advertisement -
Ad imageAd image

மனித குலத்திற்கு  சேவை செய்யும் பலருக்கு கைமாறு கருதாமல் பலனாற்றும் பலரை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம்.அவர்களை கண்டு வியந்திருக்கிறோம்.இப்படி பட்ட மனித சமூகத்திற்க்கு சுவாசத்தை கொடுத்த மரத்தை யாரோ வெட்டி சாய்த்திருக்கிறார்கள்.ஏன்? வெட்டினீர்கள் என் அந்த மரம் கேட்கிறது என்ன பதில் சொல்ல முடியும் நம்மால்.

சேலம் புதிய பஸ் நிலையம் அருகே சின்னேரி வயக்காடு செல்லும் பாதையில் பகத்சிங் தெருவில் கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டு ஒரு புங்கை மரம் பராமரிக்கப்பட்டு வந்தது. அதனை சமூக ஆர்வலர்கள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த மரம் இரவோடு இரவாக வெட்டப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் இது பற்றி புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார், விசாரணை நடத்தியதில், மரத்தின் அருகில் வசித்து வரும் கட்டிட உரிமையாளர் கட்டிடம் மறைப்பதாக கூறி அந்த மரத்தை வெட்டியதும், மாநகராட்சி நிர்வாகம், வருவாய்த்துறை, நெடுஞ்சாலை துறை உள்ளிட்ட நிர்வாகத்திடம் இருந்து உரிய அனுமதி பெறாமல் மரத்தை வெட்டி சாய்த்துள்ளதும் கண்டு பிடிக்கப்பட்டது.தற்போது அந்த மரம் இருந்த இடத்தில் மரம் பேசுவதாய் சில இளைஞர்கள் ஒரு பேனர் வைத்துள்ளனர்.இது காண்போரை கண்ணீர் சிந்த வைக்கிறது மரத்தை வெட்டியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுத்தால் தான் ஆறுதலடைவார்கள் அந்த இளைஞர்கள் அரசு நடவடிக்கை எடுக்குமா!

Share This Article
Leave a review