கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வளையமாதேவி கிராமத்தில் சமகால இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர அரசு வேலை உள்ளிட்ட தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் விரிவாக்க பணியை மேற்கொள்ள வந்தவழங்காத என்எல்சி நிர்வாகத்தை கண்டித்து , ஜேசிபி எந்திரம் உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு கிராம மக்கள் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித்தேவன் தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் அவர்களின்குறைகளை கேட்டு அறிந்தார். அப்போது
சட்டமன்ற உறுப்பினர் வந்துள்ளார் என்று தெரிந்தவுடன் நிலம், மனைகளை சமன்படுத்திக் கொண்டிருந்த என்எல்சி அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் நொடிக்கும் குறைவான பொழுதில் அவ்விடத்தை விட்டு காணாமல் சென்றன. பின்னர் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித்தேவன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் தமிழக அரசு சட்டசபையில் கூறியது போல முத்தரப்பு குழுவை அமைத்து விவசாயிகள், கிராம மக்களின் குறைகளை கேட்டு அறிந்து பின்பு அவர்களுக்கான சரியான சமகால இழப்பீடு வழங்கிவிட்டு பின்பு பணிகளை துவங்க வேண்டும்.

இதனை பலமுறை நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். ஆனால் இன்று அதிகாரிகள் எவ்வித அறிவிப்பு கொடுக்காமல் திடீரென வந்துள்ளது பலருக்கும் வேதனை அளிப்பதாக இருக்கிறது. என்று தெரிவித்தார் முக்கியமாக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்த நிலையில் அது 21 ஆம் தேதியுடன் நிறைவடைந்த பிறகு அதுவரை அமைதியாக இருந்த என்எல்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகம் சட்டமன்றம் முடிவுற்றபின் தற்போது வளையமாதேவி கிராம பகுதியில் திடீர்னு உள்ளே நுழைந்து பணிகளை துவக்கி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என அப்பகுதி விவசாயிகள் கிராமங்களும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது.