- அய்யம்பேட்டை ஆசாத் நகர் மற்றும் நேரு நகரில் கழிவுநீர் குழாய் அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு. பேரூராட்சி அலுவலகத்தின் உள்ளே சென்று அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்..
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா அய்யம்பேட்டை ஆசாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. தனிநபர் ஒருவருக்காக இந்த குடியிருப்பின் கழிவு நீர், சுமார் 1500-நபர்கள் வசிக்கும் ஆசாத்நகர் மற்றும் நேருநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வழியாக செருமாக்கநல்லூர் பாசன வாய்க்கால் பகுதிக்கு கொண்டு செல்வதற்கு பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகிறது இந்நிலையில் இந்த பாசன வாய்க்கால் மூலம் பல ஏக்கருக்கு பாசன வசதியும் பெறுகின்றன கழிவு நீர் குழாய் உடைந்து நிலத்தடி நீரில் கலந்தால் குடிநீர் பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கழிவு நீர் குழாய் அமைப்பு திட்டத்தை கைவிட வலியுறுத்தி அய்யம்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளே சென்று, செயல் அலுவலரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் பேரூராட்சி அலுவலகம் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அய்யம்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ரவிமதி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் இன்று காலையில் நடைபெற்ற பேரூராட்சி உறுப்பினர் கூட்டத்தில் 14-பேர் கலந்து கொண்ட நிலையில், திமுக கவுன்சிலர் உட்பட 08-பேர் கழிவு நீர் குழாய் அமைப்பதை கண்டித்து கூட்டத்தை புறக்கணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.