மாறிவரும் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. இந்த காலநிலை மாற்றம் விவகாரத்தில் அவசர நிலை பிரகடனம் என்பதை உலக நாடுகள் அமல்படுத்த வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சியின் நிருவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் கோவையில் பாட்டாளி மக்கள் கட்சி சாரபாக காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ராஜவீதி தேர்நிலை திடலில் நடைபெற்றது. கோவை பாமக கிழக்கு மாவட்ட செயலாளர் கோவை ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பொதுக்கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகள் எதிர்கொண்டு வரும் கால நிலை மாற்றம் குறித்த தலைப்பில் உரையாற்றபட்டது. குறிப்பாக அதிக வெப்பம், பருவ கால மாறுபாடால் ஏற்படும் கடும் வெப்பம் மற்றும் மழை, மரம் வளர்த்தலின் தேவை, நீர்நிலைகளை பாதுகாப்பதன் அவசியம், சுற்று சூழலை பேணுவது உள்ளிட்டவற்றை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல் பெண் கனரக வாகனம் மற்றும் பேருந்து ஓட்டுனரான ஷர்மிளாவிற்கு (AMR) அன்புமணி ராமதாஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கி கெளரவித்தார்.
பொதுக்கூட்டத்தின் முடிவில் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சியினர் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் உடலுக்கு தீங்கு விளைவிக்காத நாட்டு சர்க்கரை வழங்கபட்டது.