- தஞ்சாவூர் கும்பகோணம் அருகே உள்ள தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், சுவாமிமலை சுந்தரவிமல் நாதன் தாக்கல் செய்த பொது நல மனு மீதான விசாரணையில், பிஎம்-கிசான் திட்டத்தில் குத்தகை விவசாயிகளையும் சேர்க்க வேண்டும்.
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியை ஆண்டிற்கு 6000 என்பதில் இருந்து 12ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டு ம் என கோரிய மனு மீதான விசாரணையில்இது குறித்து, மத்திய, மாநில விவசாயதுறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
மத்திய அரசின் பிஎம்-கிசான் திட்டம் நாட்டிலுள்ள அனைத்து நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்கும் நோக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மத்தியத் அரசின் திட்டமான “பிரதான் மந்திரி கிசான் சம்மான்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் விவசாய நிலத்தின் உரிமையாளர்களாக இருந்து விவசாயம் மேள்கொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு அமல் படுத்தப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பயிர் பாதுகாப்பு , மற்றும் நல்ல விளைச்சலை உறுதி செய்வதற்காக பல்வேறு உதவி தொகை வழங்கப்படுகிறது. விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் அவர்கள் வங்கி கணக்கில் ஆண்டுக்கு ரூ.6000/ வரை வரவு வைக்கப்படுகிறது. விதிகளுக்கு உட் பட்டு தகுதி உள்ள நபர்களுக்கு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக ஆன்லைனில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பணம் வரவு வைக்கப்படுகிறது. அதேசமயம் இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 1.2 கோடி குத்தகை விவசாயிகள் ,பங்கு பயிர் செய்பவர்களுக்கு விவசாய இடுபொருள் செலவு பலன்கள் வழங்கப்படவில்லை. எனவே மத்திய அரசின் மத்திய அரசின் பிஎம்-கிசான் திட்டத்தில் பயனாளிகளாக குத்தகை விவசாயிகளையும் சேர்க்க வேண் டும்.பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியை ஆண்டிற்கு 6000 என்பதில் இருந்து 12ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். என மனுவில் கூறி யிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. இது குறித்து, மத்திய, மாநில விவசாயதுறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.