100 நாள் வேலை திட்டத்தில் முறையாக பணம் வழங்காததால் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்த பொதுமக்கள் சாலை மறியல்.
விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பில்ராம் பட்டு கிராமத்தில் ஐந்தாவது வார்டு உறுப்பினர் கல்பனா தலைமையில் 50 ஆண்கள் 30 பெண்கள் என ஒரு நாள் வேலை திட்டத்தில் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இவர்களுக்கு பில்ராம்பட்டு ஊராட்சி சார்பில் சரியான முறையில் சம்பளம் கிடைக்காததால் இன்று வட்டார வளர்ச்சி அலுவலர் இதற்கு உரிய பதில் அளிக்க வேண்டும் எனக் கூறி திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அரகண்டநல்லூர் போலீசார் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் சம்பளம் வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளிப்பின் பேரில் கலந்து சென்றனர்.