தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் 13-வது பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்துள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்புக்கொடியுடன் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது போலீசார் அங்கு வந்து ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் மீதியை ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கைது செய்வோம் என்றும் எச்சரித்தனர்.

தமிழக ஆளுநர் ஆர் என் ரவி அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராகவும் ஆர்எஸ்எஸ் சங் பரிவார் அமைப்புகளின் முகவராகவும் தமிழ்நாட்டு மக்கள் நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்படுவதாகவும, ஆளுநர் ரவி தமிழகத்தை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் கைகளில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
ஆளுநருக்கு கருப்பு கோடி போராட்டம் அறிவிப்பிலிருந்து தஞ்சை பகுதியில் போலீசார் உஷார் நிலையில் இருந்தனர் மேலும் 50 பேர் கைது செய்யப்பட்டவுடன் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.