திண்டிவனத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமை ஆசிரியரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகை இட்டனர்..

2 Min Read
திண்டிவனம் காவல் நிலையம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விட்டலாபுரம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

- Advertisement -
Ad imageAd image

இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராக சகலகலாதரன் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி யுள்ளார். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு வந்து வகுப்பு ஆசிரியர்களிடம் இது குறித்து தெரிவித்தனர். அப்போது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை தலைமை ஆசிரியர் சகலகலாதரன் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டி  கேட்ட உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்து தலைமை ஆசிரியர் சகலகலாதரனுக்கு, போலீசார் முன்னிலையில் தர்ம அடி கொடுத்தனர். இதனால் அங்கு சில நேரும்   பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தலைமை ஆசிரியரை திண்டிவனம் போலீஸ் நிலையம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மீது திண்டிவனம் அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோவில் வழக்கு பதிவு செய்தனர். அப்போது திடிரென்று தலைமையாசிரியருக்கு  உடல் நிலை குறைவு ஏற்பட்டதால் சென்னையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.இதனால் மேலும் ஆத்திர மடைந்த பொதுமக்கள், போலீசார் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி இன்று காலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட உள்ள தாக அறிவித்தனர். இதையடுத்து அசம்பாவிதங்கள் நிகழாமல் இருப்ப தற்கு விழுப்புரம் ஏ.டி.எஸ்.பி. கோவிந்தராஜ், டி.எஸ்.பி.க்கள் உமா சங்கர், சுரேஷ் பாண்டியன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட போலீ சார் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு குவிக்கப்பட்டனர். இதையடுத்து மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 12 மணியளவில் போலீஸ் நிலையத்தின் முன்பு திரண்டனர். அவர்களை முற்றுகையிட விடாமல் தடுத்த போலீசார், அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகி்ன்றனர். இதனால் திண்டிவனம் நகரப் பகுதி பதட்டமாகவும், பரபரப்பாகவும் காணப்படுகிறது.

Share This Article
Leave a review