சுற்றுலா அமைச்சகம் நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தி வருகிறது. மத்திய சுற்றுலா அமைச்சகம் தமது தன்னார்வ திட்டத்தின் மூலம் புதிய ஹோட்டல் திட்டங்களை ஊக்குவிக்கிறது. நாட்டில் உள்ள பாரம்பரிய ஹோட்டல்கள் மற்றும் ஹோம்ஸ்டேக்கள் எனப்படும் தங்குமிடங்களுக்கான ஒப்புதலை தேசிய ஒருங்கிணைந்த விருந்தோம்பல் தொழில் (நிதி) இணையதளம் மூலம் சுற்றுலா அமைச்சகம் வழங்குகிறது.
கிராமப்புற ஹோம்ஸ்டேக்கள் எனப்படும் தங்குமிடங்களை மேம்படுத்துவதற்கான தேசிய உத்திசார் திட்டத்தையும் சுற்றுலா அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று கிராமப்புறங்களில் தொழில்முனைவோர் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாகும்.
மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், அனைத்து மாநில அரசுகள் மற்றும் தொழில்துறையினருடன் கலந்தாலோசித்து இந்தியாவில் கிராமப்புற சுற்றுலா வளர்ச்சிக்கான தேசிய உத்திசார் திட்டத்தை சுற்றுலா அமைச்சகம் உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் கிராமப்புற சுற்றுலாவில் உள்ள வாய்ப்புகளை பெண்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் பெண்களின் வளர்ச்சி மற்றும் அதிகாரமளித்தலுக்கான ஒரு துறையாக சுற்றுலா செயல்பட முடியும்.
இந்த தகவலை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி இன்று மாநிலங்களவையில் தெரிவித்தார்.