தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டருக்கு தடை.

1 Min Read
தீபாவளி பண்டிகையில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
  • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கான டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத் திடலில் பட்டாசு விற்பனை செய்வதற்காக டெண்டர் கோரப்பட்டது. இந்த டெண்டருக்கு விண்ணபித்த சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கத்தின் டெண்டர் விண்ணப்பத்தை நிராகரித்த அரசு, தகுதியில்லாத சென்னை பட்டாசு விற்பனையார்கள் நலச் சங்கத்தின் டெண்டர் விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறி, சென்னை பட்டாசு முகவர்கள் நலச் சங்கத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image
சென்னை உயர் நீதிமன்றம்

அந்த மனுவில், எந்த நேரத்திலும் சென்னை பட்டாசு விற்பனையார்கள் நலச் சங்கத்துக்கு டெண்டர் வழங்கப்படலாம் என்பதால், டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், தங்கள் விண்ணப்பத்தை ஏற்க உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜய் ஆனந்த், எந்த வித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் டெண்டர் கோரப்பட்டுள்ளதாகவும். டெண்டர் குறித்து முறையாக எந்த அறிவிப்பும் இல்லை என தெரிவித்தார்.

இதனையடுத்து, அரசே பட்டாசு கடைகளை அமைக்காமல் வெளி நபர்களுக்கு டெண்டர் அளித்து ஏன் பட்டாசு விற்பனை செய்யப்படுகிறது என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/the-new-bus-station-in-villupuram-has-started-to-look-like-a-pond-again/

இதற்கு பதிலளித்த அரசு வழக்கறிஞர், ஒவ்வொரு ஆண்டும் இந்த நடைமுறை தான் பின்பற்றப்படுவதாக கூறினார்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தீவுத் திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட டெண்டர் நடைமுறைகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

Share This Article
Leave a review