தயாரிப்பு குறைபாடு : HP கணினி நிறுவனம் இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு . !

2 Min Read
ஹெச்பி நிறுவனம்

தயாரிப்பு குறைபாடு உடைய பொருளை வழங்கிய முன்னணி கணினி நிறுவனம், பாதிக்கப்பட்ட வாடிக்கையாளருக்கு லேப்டாப் தொகை 96 ஆயிரத்து 898 ரூபாயுடன், சேவை குறைபாடுக்கு 10 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, சென்னை தெற்கு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

சென்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனு : ” அடையாறு டாக்டர் முத்துலட்சுமி சாலையில் ஐ.டி.வேர்ல்ட் இந்தியா பிரைவேட் என்ற நிறுவனம் உள்ளது. இங்கு, 2021 ஆக.,11ல், 92 ஆயிரத்து 499 ரூபாய் விலையில் ‘ஹெச்பி பெவிலியன் 15 கேமிங்’ லேப்டாப் வாங்கினேன்.

கூடுதல் ‘வாரண்டி’க்கு என, தனியாக 4 ஆயிரத்து 399 ரூபாய் செலுத்தினேன். புதிய லேப்டாப் பயன்படுத்தி வந்தபோது, 2022 செப்டம்பரில் லேப்டாப் இயங்கும் வேகம் குறைந்தது. பின், தானாக ‘சுவிட் ஆப்’ அல்லது டிஸ்பிளே கருப்பாக தெரிவது போன்ற பிரச்னைகள் அடுத்தடுத்து வந்தன.

சென்னை உயர் நீதிமன்றம்

அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்டர் பிரதிநிதிகள், லேப்டாப் பழுதை சரி செய்த வழங்கினர். பின், மீண்டும் லேப்டாப் இயக்கத்தில் குறைபாடு, டிஸ்பிளே பிரச்னை, பணி செய்து கொண்டிருக்கும்போது சுவிட் ஆப் ஆவது, தட்டச்சு செய்து வைத்த ஆவணங்கள் காணாமல் போவது போன்ற பல பிரச்னைகள் தொடர் கதையாகின.

பழுதை சரிசெய்து தர பலமுறை நிறுவன பிரதிநிதிகளுக்கு வாய்ப்பளித்தும், தொழில்நுட்ப நிபுணர்களால் முடியவில்லை. கட்டணத்தை திருப்பி அளிக்கும்படி, 2023 பிப்.27ல் மின்னஞ்சல் அனுப்பினேன். கட்டணத்தை திரும்பி அளிக்கவில்லை. மேலும் பழுதையும் சரி செய்ய முடியாமல், தன்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கினர்.

எனவே, லேப்டாப்க்கு செலுத்திய 96,898 ரூபாயை திருப்பி வழங்குவதோடு, சேவை குறைபாடாக 10 ஆயிரமும், மன உளைச்சலுக்கு 5 ஆயிரம் ரூபாயும், சம்பந்தப்பட்ட நிறுவனம் வழங்க உத்தரவிட வேண்டும் ” , இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை, சென்னை தெற்கு மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற தலைவர் பி.ஜிஜா, உறுப்பினர்கள் டி.ஆர்.சிவகுமார், எஸ். நந்தகோபாலன் அடங்கிய அமர்வு விசாரித்தது. பின் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர் வாங்கிய லேப்டாப் வாரண்டி காலம், வரும் அக்.8ம் தேதி வரை உள்ளது. பழுதை சரிசெய்ய, ஹெச்.பி., நிறுவன பிரதிநிதிகள் பல முறை முயன்றும், அதை சரிசெய்ய முடியவில்லை.

எனவே, பொருளுக்கான பணம் திருப்பி அளிக்கவோ அல்லது வேறொரு புதிய பொருளை வழங்கவோ கோரியும், மனுதாரர் தரப்புக்கு உரிய பதிலை நிறுவனம் வழங்கவில்லை.

கொஞ்சம் இதையும் படிங்க: https://thenewscollect.com/padma-bhushan-captain-vijayakanths-72nd-birthday-party-workers-political-leaders-celebrate-with-tears/

சேவை குறைபாடாக தயாரிப்பு நிறுவனம் நடந்துள்ளது தெரியவருகிறது. எனவே, பொருளுக்காக மனுதாரர் செலுத்திய 96,898 ரூபாயும், சேவை குறைபாடு, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு 10 ஆயிரமும், வழக்கு செலவாக 5 ஆயிரம் ரூபாயும், மனுதாரருக்கு, எட்டு வாரத்துக்குள் ஹெச்.பி. நிறுவனம் வழங்க வேண்டும் . என்று உத்தரவு பிறப்பித்துள்ளது

Share This Article
Leave a review