தனியார் மகளிர் கல்லூரி விடுதி மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி..!

1 Min Read
தனியார் மகளிர் கல்லூரி

தனியார் மகளிர் கல்லூரி விடுதியில் குடிநீரில் ஏற்பட்ட மாசு பிரச்னை காரணமாக வாந்தி,வயிற்றுப்போக்கால் மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

- Advertisement -
Ad imageAd image

கோவை பகுதியில் அவிநாசி சாலை பீளமேடு அருகில் தனியார் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் மாணவிகளுக்கான விடுதி ஹோப்ஸ் சிக்னல் அருகே தனியார் மகளிர் கல்லூரி சார்பில் செயல்பட்டு வருகிறது. இவ்விடுதியில் பல வெளியூரை சேர்ந்த மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் விடுதியில் மாணவர்கள் எப்பொழுது போல் உணவு அருந்தி தண்ணிர் குடித்து சென்றனர்.அப்பொழுது திடிரென்று மாணவிகள் ஒரு சிலர்க்கு வாந்தி, வயிற்றுப்போக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளது.உடனே வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்ட மாணவிகளை விடுதியின் சார்பில் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் மாணவிகளை கொண்டு சென்று சேர்க்கப்பட்டது.பின்னர் மாணவிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டனர்.

மாதிரி படம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் சிகிச்சை பெற்று உடனே கல்லூரி மாணவிகள் விடுதிக்கு திரும்பினர்.பின்னர் லேசான பாதிப்பு என்பதால் மாணவிகள் சிகிச்சை பெற்று மருத்துவமனையில் இருந்து அனைவரும் நலமுடன் விடுதி திரும்பி விட்டதாகவும், தண்ணீரில் ஏற்பட்ட மாசு பிரச்சனை தொடர்பாக இருக்கலாம் என்பதால் தனியார் மகளிர் கல்லூரி சார்பில் மாநகராட்சியிடம் புகார் தெரிவிக்கப்பட்டனர், பின்பு கல்லூரியில் முறையாக அனைத்து இடங்களும் சுத்திகரிக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதை உறுதி செய்கிறோம், என கல்லூரி தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

தனியார் மகளிர் கல்லூரி

மேலும் சம்மந்தப்பட்ட கல்லூரியில் சுகாதாரத்துறை மருத்துவக் குழுவினர் சந்தித்து ஆய்வு செய்து வருகின்றனர்.விடுதியில், மாநகராட்சி குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில், மாநகராட்சி விநியோகத்தில் பாதிப்பு இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. சுகாதாரத்துறை ஆய்வில் குடிநீரில் ஏற்பட்ட மாசு தொடர்பான விவரங்கள் அறியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என சுகாதாரத்துறை கூரியுள்ளார்.

Share This Article
Leave a review