- தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே உள்ள வெண்டையம் பட்டி ஊராட்சியில் உள்ள வேலுப்பட்டி கிராமத்திற்கு சொந்தமான வேலு ப்பட்டிய ஏரி ,காமாட்சி ஏரி ,புதுஏரிகளை நம்பி 100 மேற்பட்ட ஏக்கர் பாசனப் பரப்பு நிலங்கள் உள்ளன.
இந்த ஏரிகளுக்கு மனையேறிப்பட்டி உள்ள ஏரியில் இருந்து தான் தண்ணீர் வர வேண்டும் ,நீர் வரும் வழித்தடத்தில் தனியார் நிறுவனங்கள் தங்கள் பகுதிக்கு செல்லக்கூடிய சாலைகளில் பாலங்கள் கட்டியும் குழாய்கள் பதித்தும் வைத்துள்ளதால் ,ஏரிக்கு வரக்கூடிய தண்ணீர் வழித்தடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கொஞ்சம் இதையும் படிங்க : https://thenewscollect.com/application-for-release-of-a-life-sentence-prisoner-the-high-court-ordered-the-tamil-nadu-government-to-reconsider/
உடனடியாக இந்த வழித்தடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும். தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் விவசாயிகள் தங்களுடைய வாழ்வாதாரத்தை இழந்து நிற்பதாக தெரிவிக்கின்றனர்.
தமிழக அரசு உடனடியாக கவனத்தில் எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி பூதலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வேலுப்பட்டி விவசாயிகள் பட்டினி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.