தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து 30 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

1 Min Read
பள்ளத்தில் பேருந்து

தனியார் பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து 30 பேர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி கும்பகோணம் நெடுஞ்சாலையில் உள்ளது பஞ்சமாதேவி கிராமம். இந்த கிராமத்தில் இன்று காலை திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் வழியாக நெய்வேலி செல்லக்கூடிய ஒரு தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம் வழியாக சென்ற பேருந்து கோலியனூர் கூட்டு சாலையை தாண்டி பஞ்சமாதேவியை நோக்கி சென்று கொண்டிருந்தது.

பள்ளத்தில் பேருந்து

அப்போது பஞ்சமாதேவி அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் எதிர்புறம் இருந்து வந்து பேருந்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பேருந்து ஓட்டுனர் வாகனத்தை வேறு திசைக்குத் திருப்ப அது தடுப்பு சுவர் மீது மோதி  அருகில் உள்ள பள்ளத்தில் தலைகீழாய் கவிழ்ந்தது  இதனால் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டவர்கள் சிறு காயத்துடன் எட்டு ஆம்புலன்ஸ் மூலமாக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது ஒரு சிலர் குணமான நிலையில் வீடு திரும்பி வருகின்றனர். உயிர் சேதம் எதுவும் இல்லாமல் இந்த விபத்து நடந்துள்ளது.

Share This Article
Leave a review