பிரதமர் நரேந்திர மோடி, தனது மாதாந்திர வானொலி நிகழ்ச்சி இன்றுடன் ஒன்பது ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், மனதின் குரல் நிகழ்ச்சிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள சில கருப்பொருள்கள் மற்றும் அவற்றின் சமூக தாக்கத்தை முன்னிலைப்படுத்தும் ஒரு ஆய்வைப் பகிர்ந்து கொண்டார்.
பாரத ஸ்டேட் வங்கி மற்றும் ஐஐஎம் பெங்களூரு இணைந்து நடத்திய இந்த ஆய்வில், பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியின் 105 அத்தியாயங்களின் தாக்கம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஊடக எக்ஸ் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது, “மனதின் குரல் நிகழ்ச்சி இன்று 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், ஸ்டேட் ஆப் இந்தியா மற்றும் பெங்களூருவில் உள்ள இந்திய மேலாண்மைக் கழகம் ஆகியவற்றின் சுவாரஸ்யமான ஆய்வு தொகுக்கப்பட்டுள்ளது.
இது உள்ளடக்கப்பட்ட சில கருப்பொருள்கள் மற்றும் அவற்றின் சமூக தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. இந்த ஊடகத்தின் மூலம் பல வாழ்க்கைப் பயணங்களையும், கூட்டு முயற்சிகளையும் நாம் எவ்வாறு கொண்டாடினோம் என்பது ஆச்சரியமாக இருக்கிறது” என்றார்.