சூரத்தில் வைர வணிக மையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

2 Min Read

குஜராத் மாநிலம் சூரத்தில் சூரத் வைரக் கண்காட்சியைப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு முன்னதாக, பஞ்சதத்வா தோட்டத்திற்குச் சென்று, சூரத் வைர வணிக மையம் மற்றும் ஸ்பைன் -4-ன் பசுமைக் கட்டிடத்தைப் பிரதமர் பார்வையிட்டார், பார்வையாளர் கையேட்டில் கையெழுத்திட்டார். முன்னதாக சூரத் விமான நிலையத்தில் புதிய முனையக் கட்டிடத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.

- Advertisement -
Ad imageAd image

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், சூரத் நகரத்தின் பிரம்மாண்டத்திற்கு ஒரு புதிய வைரம் சேர்க்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார். “இது ஒரு சாதாரண வைரம் அல்ல, உலகின் மிகச் சிறந்தது” என்று கூறிய மோடி, சூரத் வைர வணிக மையத்தின் பிரகாசம் உலகின் மிகப்பெரிய வைரங்களை மறைக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டினார். வல்லபாய் லக்கானி, லால்ஜிபாய் படேல் ஆகியோரின் பணிவு மற்றும் இத்தகைய பெரிய திட்டத்தின் வெற்றிக்குப் பின்னால் அனைவரையும் அழைத்துச் செல்லும் உத்வேகம் ஆகியவற்றைப் பாராட்டிய அவர், இந்த நிகழ்வில் சூரத் வைர வணிக மையத்தின் ஒட்டுமொத்தக் குழுவையும் பாராட்டினார்.

“சூரத் வைர வணிக மையம் இப்போது உலகின் வைர பங்குச்சந்தைகள் குறித்த விவாதங்களின் போது இந்தியாவின் பெருமையுடன் முன்னணிக்கு வரும்” என்று அவர் தெரிவித்தார். “சூரத் வைர வணிக மையம் இந்திய வடிவமைப்புகள், வடிவமைப்பாளர்கள், பொருட்கள் மற்றும் கருத்தாக்கங்களின் திறன்களை வெளிப்படுத்துகிறது. இந்தக் கட்டிடம் புதிய இந்தியாவின் திறன்கள் மற்றும் தீர்மானங்களின் அடையாளமாகும். சூரத் வைர வணிக மையத்தைத் திறந்து வைத்ததற்காக ஒட்டுமொத்த வைரத் தொழிலுக்கும், சூரத், குஜராத் மற்றும் இந்திய மக்களுக்கும் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

மோடி

சூரத் வைர வணிக மையத்தில் இன்று தனது நடைபயணத்தை நினைவுகூர்ந்த பிரதமர், உலகெங்கிலும் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் பசுமை கட்டிடம், கட்டிடக்கலை மற்றும் கட்டமைப்பு பொறியியல் மாணவர்கள் கற்றலுக்கான கருவியாகப் பயன்படுத்தும் கட்டிடத்தின் ஒட்டுமொத்த கட்டிடக்கலை, நிலத்தோற்றத்தில் ஒரு பாடத்திற்கு எடுத்துக்காட்டாக பயன்படுத்தப்படும் பஞ்சதத்வா தோட்டம் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.

சூரத்திற்கான மற்ற இரண்டு பரிசுகள் குறித்துப் பேசிய பிரதமர், சூரத்தில் ஒரு புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்ததையும், சூரத் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக உயர்த்துவதையும் குறிப்பிட்டார். நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று கூடியிருந்தவர்கள் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்தனர். சூரத் – துபாய் விமானப் போக்குவரத்து தொடங்குவது குறித்தும், ஹாங்காங்கிற்கு விரைவில் தொடங்கவிருக்கும் விமானம் குறித்தும் அவர் தெரிவித்தார். “சூரத்துடன், குஜராத் இப்போது மூன்று சர்வதேச விமான நிலையங்களைக் கொண்டுள்ளது” என்று அவர் கூறினார்.

Share This Article
Leave a review