சென்னை மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றும்போது எந்த அளவிற்கு உணர்ச்சி மேலோங்கியதோ அதே போல் உணர்ச்சி இந்தியா என்பதை பாரதம் என்று அழைக்கும்போது உணர்ச்சி மேலோங்கும் தமிழிசை பெருமிதம் – கருத்தை கருத்தால் எதிர்கொள்ளலாம் கலவரத்தால் எதிர்கொள்ள முடியாது என புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்
புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் மாநில அளவிலான அமிர்த கலச யாத்திரை ஒருங்கிணைக்கும் “என் மண், என் தேசம்” இயக்கத்தின் மூன்றாம் அமர்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் பங்கேற்று புதுச்சேரியில் உள்ள பல்வேறு நகராட்சியில் இருந்து கொண்டு வரப்பட்ட மண் கலசங்களை கொண்டு மாநில அளவிலான அமிர்த கலச யாத்திரை ஒருங்கிணைக்கும் நிகழ்வை தொடக்கி வைத்தனர்.

இந்த விழாவில் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பாரதம் என்ற சொல் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தான் சிபிஎஸ்இ பாட புத்தகத்தில் இந்தியா என்ற வார்த்தைக்கு பதிலாக பாரதம் என்று அழைக்கலாமா என்ற யோசனை வந்திருக்கின்றது அதை அந்த குழு பரிந்துரை செய்துள்ளது என்றவர், சென்னை மாகாணம் என்ற பெயர் தமிழ்நாடு என்று பெயர் மாற்றும்போது எந்த அளவிற்கு உணர்ச்சி மேலோங்கியதோ அதே போல் உணர்ச்சி இந்தியா என்பதை பாரதம் என்று அழைக்கும்போது உணர்ச்சி மேலோங்குகின்றது என்றார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆளுநர் ஒரு கருத்தைச் சொன்னால் அதை ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எந்த அளவிற்கு மோசமாக எதிர்கொள்கிறார்கள் என்பதை வைத்து இதைப் போன்றவர்கள் எல்லாம் வன்முறையில் ஈடுபட்டால் நமக்கு ஆதரவு கிடைக்கும் என்று எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில் அங்கே பேச்சுக்கள் நடைபெறுகிறது என்பது தான் வருத்தத்தை அளிக்கின்றது கருத்தை கருத்தால் தான் எதிர்கொள்ள வேண்டும் வன்முறையால் அல்ல கலவரத்தால் எதிர்கொள்ள முடியாது என்றவர், கருத்தை வார்த்தை களவரதத்தாலும், வன்முறை களவரத்தாலும் எதிர்கொள்ளும் சூழ்நிலை எந்த மாநிலத்திலும் இருக்க கூடாது என்றவரிடம்,
அன்புமணி ராமதாஸ் நீட் தேவையில்லை என்ற கருத்து குறித்து
செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை அந்த டாக்டருக்கு நீட் வேண்டாம் என்ற கருத்து இருக்கலாம் ஆனால் இந்த டாக்டருக்கு (தமிழிசை) நீட் வேண்டும், நீட் தேர்வால் சாமானிய மக்கள் கூட மருத்துவராக முடிகிறது என்று தெரிவித்தார்.