இந்திய பிரதமர் நரேந்திர மோடி மோடி டெல்லி தொடங்கி நாட்டின் பல்வேறு மாநிலங்களில் 7 நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். அவரது இந்த சுற்றுப்பயணத்தில் பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், திட்ட பணிகளை தொடங்கி வைத்தும் உரையாற்றுகிறார்.
இதன்படி அவரது பயணம் டெல்லியில் இருந்து இன்று தொடங்கியது. முதலில், மத்திய இந்திய பகுதியான மத்திய பிரதேசத்திற்கு அவர் சென்றுள்ளார். அவரை மாநில முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் முறைப்படி வரவேற்றார். இதன்பின்பு, ரேவா நகரில் நடந்த தேசிய பஞ்சாயத்து ராஜ் திட்ட நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதனையொட்டி நடந்த சிறப்பு கண்காட்சியிலும் அவர் பங்கேற்றார்.
இதன்பின் ரேவா நகரில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றியபோது, நாட்டில் பஞ்சாயத்து ராஜ் நடைமுறையை வலுப்படுத்த எங்களுடைய அரசு சீராக பணியாற்றி வருகிறது என்று தெரிவித்தார் .
மேலும் அவர் , கிராமப்புற இந்தியாவில் வசிப்பவர்களின் வாழ்வை எளிமையாக்க அரசு மேற்கொண்டு வரும் எந்தவொரு திட்டம் என்றாலும், அதனை நம்முடைய பஞ்சாயத்து அமைப்புகள் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்தி வருகின்றன.
நாட்டில் பஞ்சாயத்து ராஜ் அமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு வழிகளில் தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது . இந்தியாவின் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு அரசு என்ன திட்டங்களை கொண்டு வந்தாலும் அவற்றை நமது பஞ்சாயத்துகள் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்துகின்றன . ஊராட்சிகளுக்கு ரூபாய் 70,000 கோடியாக நிர்ணயிக்கப்பட்டு இருந்த பட்ஜெட் 2014 பாஜக ஆட்சிக்கு பிறகு ரூபாய் 2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது .
சுதந்திரத்திற்கு பிறகு அதிக ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரு கட்சி கிராமப்புற மக்களின் வளர்ச்சியில் ஒருபோதும் அக்கறையை காட்டவில்லை. அம்மக்களின் நம்பிக்கையை உடைத்தது, முந்தைய அரசுகள் மக்களை ஒட்டிவிகிதத்திலே கணக்கிட்டனர் கிராமப்புறங்களில் அதிக ஓட்டு இல்லாததால் வளர்ச்சி பணிகளுக்கு பணம் செலவழிக்க தயங்கினர் அதனால்தான் மக்களால் அவர்கள் தற்பொழுது புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
கிராமங்களுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைத்து க்ரமபுறமக்களின் வளர்ச்சிக்காக பாஜக தொடர்ந்து பாடுபடும் என்று தெரிவித்தார் .
பிரதமர் மோடி மத்திய பிரதேசத்தில் மொத்தம் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கிறார். இதன்பின்னர், இன்று மாலை கேரளாவின் கொச்சி நகருக்கு பயணிக்க இருக்கிறார்.