நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தேமுதிக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கு வாழ்த்துக்களையும், களப்பணி ஆற்றிய கழக வீரர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “2024 நாடாளுமன்ற தேர்தலில் எடப்படியார் தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம் மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற மனதார எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த இந்த தேர்தலுக்காக கூட்டணி சார்பாக களத்தில் இணைந்து கூட்டணி வேட்பாளர்களுக்கா அரும்பாடு பட்டு உழைத்த அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

கூட்டணி தர்மத்தோடு வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளோடு களத்தில் இறங்கி உழைத்த அனைத்து வெற்றி வீரர்களுக்கும், களப்பணி ஆற்றிய கழக வீரர்களுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக மீண்டும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜனநாயக ரீதியாக நம்முடைய கடமையை நேர்மையுடன் மக்களுக்காக சிறப்பாக பணியாற்றி இருக்கிறோம். “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” என்ற வகையில், மக்கள் நல்ல தீர்ப்பு அதிமுக தேமுதிக கூட்டணிக்கு வழங்குவார்கள் என்று நம்புவோம்.