தேனி மாவட்டத்தை சேர்ந்த மிலானி என்பவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் 1 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தகவல்களை மறைத்து எடப்பாடி பழனிசாமி பொய்யான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துள்ளார். அவரது அசையும், மற்றும் அசையா சொத்துக்கள், தொழில், வருமான ஆதாரங்கள் உண்மையான சொத்துக்களின் சந்தை மதிப்பு, கல்வி தகுதி விவரங்களை தவறான தகவல்களை அளித்துள்ளதாக மனுவில் கூறியுள்ளார்.இதுதொடர்பாக விசாரணை
நடத்தி இன்று 26ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசார், எடப்பாடி பழனிசாமி மீது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ (1),125ஏ (2),125ஏ (3) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் முதற்கட்டமாக ஆவணங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டனர். வங்கியின் வரவு – செலவு கணக்கு தொடர்பாக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புகார்தாரர் மனுவில் முகாந்திரம் உள்ளதால் எடப்பாடி பழனிசாமி மீது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 125 ஏ (1),125ஏ (2),125ஏ (3) ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு தொடர்பாக தகவல்களை நீீீீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.முதற்கட்ட விசாரணை அறிக்கையை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சேலம் 1 வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில்
அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.இதை தொடர்ந்து
மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையாளர் சூர்யா, காவல் ஆய்வாளர் புஷ்பராணி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.