“மன வலிமையையும், உடல்ஆரோக்கியம் தரும் யோகாவை கடைப்பிடிப்போம்” என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக யோகா தினம் ஜூன் மாதம் 21-ஆம் தேதி உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. யோகா பயிற்சியால் உடல், மனம் மற்றும் ஆன்மீக நன்மைகள் பற்றிய விழுப்புணர்வை ஏற்படுத்தும். பிரதமர் நரேந்திர மோடி யோகாவின் முக்கியத்துவத்தையும், தேவையையும் உணர்ந்து இந்தியா முழுவதும் யோகா தினத்தை கடைப்பிடிக்க வலியுறுத்தியுள்ளார்.
மேலும் 2014 ஆம் ஆண்டு ஐ.நா பொதுச் சபையில் பேசும்போது ஜூன் 21-ஆம் தேதியை “உலக யோகா தினமாக அறிவிக்க வலியுறுத்தினார். அதன் அடிப்படையில் 2015 ஜூன் 21 முதல் உலக யோகா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. யோகாவின் மூலமாக உடல் ஆரோக்கியமும், மன உறுதியும் மற்றும் வலிமையும் கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.

யோகாவிற்கு உலகளவில் இந்தியா அடித்தளமாக விளங்குகிறது என்பது குறிப்பிடதக்கது. யோகா உடல் ஆரோக்கியத்தை மேன்படுத்துகிறது. மன அழுத்தத்தையும், உடல் வலிகளையும் குறைக்கிறது மேலும் வராமல் தடுக்கிறது, இதய ஆரோக்கியத்தை அதிகப் படுத்துகிறது. எலும்புகள் மற்றும் மூட்டுகளை வலுப்படுத்துகிறது. மன அமைதியை மேன்படுத்துகிறது.
உடலில் நோய் வராமல் தடுக்கிறது. ஆன்மீக உணர்வுகளை ஏற்படுத்துகிறது. இப்படி பல்வேறு நன்மைகளை உள்ளடக்கிய யோகாவை பின்பற்றுவோம். சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் கடைப்பிடிக்க எளிதான யோகாவை மேற்கொள்வோம் உடல் வலிமையையும், மனவலிமையையும் பெறுவோம். இந்நந்நாளில் அனைவருக்கும் ‘உலக யோகா தின” நல் வாழ்த்துகளை அனைவருக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.