என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட முட்டை ரவி நினைவு தின போஸ்ட்ரால் பரபரப்பு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தேடுதல் வேட்டை.
திருச்சி மத்திய மண்டல மாவட்டங்களில், ஒரு சமுதாயம் சார்ந்த மிகப்பெரிய ரவுடியாக உலா வந்தவர் முட்டை ரவி ஆவார். திருச்சி பொன்மலை பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் (எ) முட்டை ரவி. திருச்சியைச் சேர்ந்த முட்டை ரவி அப்பகுதியை பல காலமாக கலக்கி வந்த பயங்கரரெளடி ஆவான்.

இவன் மீது ஏராளமான கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து என பல வழக்குகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பல ரவுடிகளை பட்டப் பகலிலையை கத்தியால் போட்டு தள்ளியவன் முட்டை ரவி. இவர் கடந்த, 2006ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது போலிசார், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரது உடல் திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடக்கறையில் புதைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவரது 16 ஆம் ஆண்டு நினைவு தினத்தை கொண்டாடும் விதமாக அவரது ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் சுவரொட்டிகளை ஒட்டி இருந்தனர்.அந்த போஸ்டரில் சர்ச்சைக்குரிய
வாசகங்கள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

அவற்றை இரவோடு இரவாக போலீசார் போஸ்டரை கிழித்தெறிந்தனர். மேலும் அவரது உடல் புதைக்கப்பட்ட இடத்தில் அவரது ஆதரவாளர்கள் வந்து அஞ்சலி செலுத்த வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதையடுத்து, 50க்கும் மேற்பட்ட போலீசார் இன்று அதிகாலை முதல், கொள்ளிடக்கரை பகுதியில் இன்று பாதுகாப்பு பணியில் போலிசார் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் கடைசிவரை அவரது ஆதரவாளர்கள் யாரும் அங்கு அஞ்சலி செலுத்த வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதன் பின்னர் போலிசார் அங்கிருந்து சென்றனர்.