மதுரை மாவட்டத்தில் திமுக எதிரான பாஜக கட்சி போஸ்டர் பல்வேறு இடங்களில் ஒட்டினர்.காவல்துறை தடுப்பு. இதனால் அப்பகுதி பெரும் பரப்பரப்பு.
மதுரை மாவட்டத்தில் பாஜக கட்சி தொண்டர்கள் நவம்பர் 1 ஆம் தேதி 100 நாட்களுக்கு தினமும் 100 கொடிகம்பங்கள் என 10000 கொடிகம்பங்கள் நடப்படும் என்று பாஜகவினர் போஸ்டர் பல்வேறு இடங்களில் ஒட்டினார்கள். மதுரை மாவட்டத்தில் திமுகவுக்கு எதிரான பாஜக தொண்டர்கள் பாஜக கட்சி போஸ்டர் பல்வேறு இடங்களில் சுவரில் போஸ்டர் ஒட்டும் போது அதனை கண்ட காவல்துறையினர் போஸ்டரை கைப்பற்றி பாஜக போஸ்டர் ஒட்டவிடாமல் தடுத்தனர்.

இதனால் அங்கு பெரும் மோசமான சூழல் நிலவியது. இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டத்தில் பாஜக கட்சி உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவின் மாநிலச் செயலாளர் விளாங்குடி எம்.வீரமுத்து என்பவர், தலைமையில் தொண்டர்கள் தத்தனேரி சரவணன், பொன்னகரம் விமல்குமார், திடீர் நகர் சுந்தர், கருப்பாயூரணி அபி ஆகியோர் அதிகமாக 60க்கும் மேற்பட்ட பாஜக கட்சி போஸ்டர்கள் விளாங்குடி, தத்தனேரி, அருள்தாஸ்புரம் ஆகிய போன்ற இடங்களில் பாஜக கட்சி போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
ஒட்டப்பட்ட பாஜக கட்சி போஸ்டர்களில் பாஜக கொடி பறக்கட்டும் ! இடி மின்னலுடன் ஒலிக்கட்டும் ! கடலில் அலை அடிக்கட்டும் ! அண்ணாமலை தேர்தலில் ஜெயிக்கட்டும் ! இதோட திமுக கதை முடிக்கட்டும் ! வாழ்க்கையில் அறம் பரவட்டும் ! தமிழகம் தலை நிமிரட்டும் ! தடை திமுக என்ற வசனங்களுடன் அச்சிடப்பட்ட பாஜக கட்சி போஸ்டர்களை பாஜகவினர் போஸ்டரில் வசனங்கள் எழுதி ஒட்டியுள்ளது அதனை கண்ட போலிசார் பாஜக தொண்டர்களை பாஜக கட்சி போஸ்டர் ஒட்டவிடாமல் தடுத்தனர்.

இதனால் மதுரையில் சாலை மறித்து மறியலில் பாஜக தொண்டர்கள் ஈடுப்பட்டனர். போக்குவரத்து நெரிசல் பொதுமக்கள் அவதி. இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.