Villupuram Arts College : மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த முதுகலை பட்டதாரி மாணவி.

1 Min Read
சக்திவேல் - யுவஸ்ரீ

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் மணக்கோலத்தில் தேர்வு எழுத வந்த மாணவிக்கு பேராசிரியர்கள் , மாணவர்கள் பாராட்டு .

- Advertisement -
Ad imageAd image

விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள சாலையாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேலின் மகள் யுவஸ்ரீ , 23 வயதான இவர், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில், முதுகலை கணினி அறிவியல் படித்து வருகிறார்.

இதேபோல் வளவனுர் அருகேயுள்ள குமரக்குப்பம் பகுதியை சேர்ந்த சிவகுமாரின் மகன் சக்திவேல் , இவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் .

இந்நிலையில் விழுப்புரம் அடுத்த வளவனூரில் உள்ள ஸ்ரீ மூகாம்பிகை திருமண மண்டபத்தில் அவர்களது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் மாணவிக்கு இன்று காலை திருமணம் நடைபெற்றது.

மேலும் இன்று திருமணம் நடைபெற்ற மாணவி யுவஸ்ரீக்கு கல்லூரியில் தமிழ் செமஸ்டர் தேர்வு இன்று நடை பெறவுள்ளது.

சக்திவேல் – யுவஸ்ரீ

இதனை யுவஸ்ரீ எழுத முடிவு செய்தார். அதன்படி, திருமணம் முடிந்த சில மணி நேரத்திலேயே அவர், மணக்கோலத்தில் அவரது கணவருடன் கல்லூரிக்கு  தேர்வு எழுத வந்தார்.

அவரை, கல்லூரி பேராசிரியர்கள் வெகுவாகப் பாராட்டினர். தேர்வு எழுதி முடித்த பின்னரே , திருமண சம்பிரதாயங்கள் நடைபெறவுள்ளதால் , மணக்கோலத்தில் யுவஸ்ரீயின் கணவர் கல்லூரி வளாகத்தின் அருகே காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது .

Share This Article
Leave a review