திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியை சேர்ந்தவர் பாலகுரு(25வயது),இவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த அஜித்(24)என்ற இளைஞருடன் ஆன்லைன் டேட்டிங் ஆப்(டின்டர் ஆப்) மூலம் பேசி பழகிவந்தார்..பாலகுருவின் பெற்றோர் மும்பைக்கு சென்ற நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சூழ்நிலையில் அஜித்தை கடந்த 22ம் தேதி வீட்டிற்கு அழைத்துள்ளார் பாலகுரு.இருவரும் இரண்டு நாட்களாக பகல் இரவு பாராமல் தீவிரமாக ஓரினச்சேர்க்கை மேற்கொண்ட நிலையில் திடீரென நேற்று பாலகுரு ஓரினச்சேர்க்கைக்கு மறுத்ததால் ஆத்திரமடைந்த அஜித் தனக்கு கிடைக்காத ஆண் குறி யாருக்கும் கிடைக்க கூடாது என கூறி சுடு தண்ணீர் எடுத்து பாலகுருவின் மீது ஊற்றியுள்ளார்.

இதில் பாகுருவின் உடலில் கை, வயிறு ,மார்பு,ஆண் குறி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது,இதை தொடர்ந்து பாலகுருவை அறையில் வைத்து பூட்டி உள்ளார் அஜித், இந்நிலையில் பாலகுருவின் அலறல் சத்தம் கேட்ட வீட்டு உரிமையாளர் காலையில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார் பாகுருவை மீட்டு ஆம்புலன்ஸில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, அஜித்தை கைது செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துழைக்காத ஆண் நண்பர் மீது சுடு தண்ணீர் ஊற்றி கொடூரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.